நாடக காதல் ‘திரௌபதி’ படத்தில் நடித்த ஷீலாவின் நிஜ காதல் கல்யாண கதை பற்றி தெரியுமா ?

0
304
Sheela
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் சீலா ராஜ்குமார். இவர் நடிகை மட்டுமில்லாமல் பரத நாட்டியக் கலைஞரும் ஆவார். இவர் முதன் முதலாக 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ஆறாது சினம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து அசுரவதம், நம்ம வீட்டுபிள்ளை போன்ற படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த அழகிய தமிழ் மகள் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Draupathi Movie Actress Sheela Rajkumar Husband

சொல்லப்போனால் இந்த சீரியல் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு தான் இவருக்கு சினிமாவில் படவாய்ப்புகள் கிடைத்தது என்றே சொல்லலாம். மேலும், இயக்குனர் மோகன் இயக்கத்தில் வெளிவந்த திரௌபதி படத்தில் சீலா நடித்து இருந்தார். பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில் வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது.

- Advertisement -

ஷீலாவின் திரௌபதி படம்:

இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது. இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது. இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். இந்த படம் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாகி இருந்தது. மேலும், பதிவு திருமண ஊழல்களை சுட்டி காட்டியும், சமூகத்தில் நிலவும் ஜாதி கொடுமைகளையும், சாதிவெறியர்களையும், ஜாதியால் நடக்கும் ஆவணக் கொலைகளையும், பாதிக்கப்பட்டோரின் அவலங்களையும் மையமாக வைத்து உருவான படம் தான் திரௌபதி.

Sheela Rajkumar Age, Height, Weight, Body, Wife or Husband, Caste,  Religion, Net Worth, Assets, Salary, Family, Affairs, Wiki, Biography,  Movies, Shows, Photos, Videos and More

யோகி பாபுவின் மண்டேலா படம்:

ஆனால், இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக காண்பித்து இருக்கிறார்கள் என்று பயங்கர சர்ச்சையும் வெடித்தது. இதனை தொடர்ந்து ஷீலா இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளிவந்த மண்டேலா படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிப்பு வேற லெவல். பாலாஜி மோகன் இந்த படத்தை தயாரித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. விஜய் தொலைக்காட்சியில் தொலைக்காட்சியில் நேரடியாக இந்த படம் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருந்தது.

-விளம்பரம்-

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட மண்டேலா படம்:

பின் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதோடு மண்டேலா திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. இதற்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். இப்படி இந்த இரண்டு படங்களிலுமே நடிகை ஷீலா மிகவும் கிராமத்தில் லுக்கில் நடித்து இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இவருக்கு திருமணம் நடந்து பலருக்கும் தெரியாத ஒன்று.

Sheela Rajkumar Wiki, Biography, Age, Movies, Serials, Images - wikimylinks

ஷீலாவின் திருமணம்:

ஆனால், இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. கடல் நடுவே மாலை மாற்றி படு வித்யாசமாக ஷீலா திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர் நாளைய இயக்குனரில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவரது குறும்படத்தில் நடிக்கும் போது தான் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளது. ஆனால், இவர்கள் காதலுக்கு இவர்கள் வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து இருந்தார்கள்.

Advertisement