திரௌபதி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் மோகன். இவர் திரௌபதி படத்திற்கு முன்பாகவே ரிச்சர்ட்டை வைத்து பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தை எடுத்திருந்தார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ ‘திரௌபதி’ திரைப்படம் தான். அதற்கு முக்கிய காரணமே இந்த படம் வெளியாவதர்க்கு முன்பாகவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்த படத்தில் நாடக காதல் என்ற பெயரில் இயக்குனர் மோகன் குறிப்பிட்ட சமூகத்தினரை டார்கெட் செய்து சில காட்சிகளையும், வசனத்தையும் வைத்தார் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை தெளிவுபடுத்தும் வகையில் அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும், பேட்டிகளிலும் மோகன் சொன்ன கருத்துக்கள் இவருக்கு சில சர்ச்சைகளையும், பெரும் பிரபலத்தையும் அளித்தது.

Advertisement

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மோகன் அடிக்கடி எதாவது பதிவுகளை பதிவிடுவது வழக்கம், அந்த வகையில் சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்தை விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார் இயக்குனர் மோகன்.

அதில், கௌதம் மேனன் அவர்களே, பல இளைஞர்கள் உங்கள் திரைப்படம், மேக்கிங் ஸ்டைல், வசனங்கள், திரைப்பட தயாரிக்கும் முறை, பாடல்களில் உள்ள புதுமை ஆகியவற்றை ரசித்து வருகின்றஇயக்குனர் மோகனின் இந்த பதிவை பார்த்த பலரும், மோகன் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். மேலும், மோகனை அவரது ஜாதியை வைத்தும் விமர்சனம் செய்தனர்.

Advertisement

இந்த நிலையில் அவ்வாறான பதிவுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள மோகன், கௌதம் மேனன் என்ற பெயரில் மேனன் என்ற அவரது இனத்தை குறிப்பிட்டு ‘மேனன் என்றால் புனிதம், சத்ரியன் என்றால் பாவமா ‘ போங்கடா டேய் என்று குறிப்பிட்டுள்ளார். மோகனின் இந்த சமூகம் சார்ந்த பதிவு மேலும் சமூக வலைதளத்தில் விவாதமாக மாறியுள்ளது. மேலும், மோகனின் ட்விட்டரின் அவரது சுயவிவர பகுதியில் கூட, தமிழன், சத்ரியன், இந்தியன் என்று குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement