திரௌபதி பட இயக்குனர் மோகன் இயக்கத்தில் ரிச்சர்ட் நடித்துள்ள 'ருத்ர தாண்டவம்' படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி மோகன் இயக்கத்தில்கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியான திரௌபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . பெரிய நட்சத்திர நடிகர்கள் கிடையாது இயக்குனருக்கு பெரிதாக அனுபவமும் கிடையாது இருப்பினும் இந்த படம் எதிர் பார்ப்பை பூர்த்தி செய்து இருந்தது.
https://www.youtube.com/watch?v=noD8uV0xcOw
இந்த படத்தில் ஹீரோவாக பிரபல நடிகை பேபி ஷாலினியின் அண்ணனும், அஜித்தின் மைத்துனருமான ரீச்சர்ட் நடித்து இருந்தார். அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் 2002 ஆம் ஆண்டு வெளியான காதல் வைரஸ் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின் ஒரு சில படங்களில் நடித்த இவர், இறுதியாக 2016 ஆம் ஆண்டு வெளியான அந்தமான் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.பின்னர் நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் திரௌபதி படத்தின் மூலம் ஒரு மாஸ் என்ட்ரியில் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கி இருந்தார்.திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து 'ருத்ர தாண்டவம்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார் மோகன்.

இந்த படத்தில் குக்கு வித் கோமாளி தர்ஷா நாயகியாக நடித்துள்ளார். மேலும், கௌதம் மேனன், ராதாரவி மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் சில போஸ்டர்கள் வெளியாகி இருந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. இன்று காலை முதலே #ருத்ரதாண்டவம் ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது என்பது கூறிப்பிடத்தக்கது.





