‘ஐயா ரொம்ப மகிழ்ச்சி ஐயா’ Dr.ராமதாஸ்ஸுடன் போனில் பேசிய திரௌபதி பட இயக்குனர் மோகன் – இந்த ஆடியோவ கேட்டு இருக்கீங்களா.  

0
662
mohan
- Advertisement -

Dr. ராமதாஸ் அவர்கள் இயக்குனர் மோகனுக்கு போன் செய்து பேசி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் தான் மோகன் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அடி எடுத்து வைத்தார். பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு மோகன் அவர்கள் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-

இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

மோகன் ஜியின் திரைப்பயணம்:

அது மட்டுமில்லாமல் இவர் இயக்கிய மூன்று படங்களிலும் ரிச்சர்ட் ரிசி தான் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், இவருடைய அடுத்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷியே கதாநாயகனாக நடிப்பாரா? இல்லையா? என்று பல எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் மோகன் ஜி தான் இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகனாக செல்வராகவனை களம் இறக்கி இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. தமிழ் சினிமாவுலகில் மிக பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் செல்வராகவன்.

மோகன் – செல்வராகவன் கூட்டணி:

சமீப காலமாக இவர் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது இவர் தளபதி விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் மீது ரசிகர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் இருக்கின்றன.

-விளம்பரம்-

மோகன் ஜியின் திருமண நாள்:

இதனிடையே இயக்குனர் மோகன் ஜி அவர்கள் நர்மதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மேதினியாழ் என்ற மகள் இருக்கிறாள். இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி இவர்கள் திருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள். இந்த நிலையில் Dr.ராமதாஸ் அவர்கள் மோகன் ஜி இடம் பேசியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் Dr.ராமதாஸ் அவர்கள் இயக்குனர் மோகன் ஜிக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வளமுடன் நலமுடன் வாழ வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

மோகனிடம் Dr.ராமதாஸ் கூறியது:

பிறகு மோகனின் மனைவிக்கும் திருமண வாழ்த்துக்களை சொல்லி இருக்கிறார். பிறகு மோகனின் மகள் Dr.ராமதாஸிடம் பேசி இருக்கிறார். அப்போது Dr.ராமதாஸ் அவர்கள் மோகனிடம் உன் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் உன்னுடைய பெண் தான். உன்னுடைய மகள் தான் பெண் தேவதை. கோவில்கள் எதற்கு, தெய்வங்கள் எதற்கு உன் மகளின் புன்னகையே போதுமடா என்று பாடலை பாடி அவருக்கு திருமண வாழ்த்துக்களை கூறியிருக்கிறார். இப்படி இவர்கள் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement