தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். சமீபத்தில் அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்த பேபி அனிகாவும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறார். அதற்கு முக்கிய காரணமே இளம் வயதில் அவர் நடத்திய சில போட்டோ ஷூட்கள் தான் காரணம்.

அந்த வகையில் தற்போது பேபி அனிகாவை போல போட்டோ ஷூட் அட்ராசிட்டி செய்து வருகிறார் பாபநாசம் பட குழந்தை நட்சத்திரம் எஸ்தர் அணில். உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் “பாபநாசம்” ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் பாருங்க : தன்னுடைய மகளுக்காக ஹீரோவை தேடும் பணியில் 90ஸ் நடிகை சிவரஞ்சனி – இவருக்கு இவ்ளோ பெரிய மகளா ?

Advertisement

ஒரு நடுத்தர குடம்பத்தை சேர்ந்த ஒரு தந்தை , தனது மகள் சந்திக்கும் பிரச்சனையை எப்படி எதிர்கொள்கிறார் என்ற கதையை மிகவும் அற்புதமாக எடுத்திருப்பார் இயக்குனர் ஜீத்து ஜோப்.மலையாள குழந்தை நட்சத்திரமான அந்த சிறுமி மலையாளத்தில் வெளியான திரிஷம் படத்திலும் மோகம் லாலுக்கு மகளாக நடித்திருந்தார்.

பாபநாசத்தில் நடித்த மீனு குட்டியை பார்த்தால் நீங்கள் அவரை குட்டி என்று அழைக்க மாடீர்கள்.அதற்கு காரணம் தற்போது அவர் வளர்ந்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். சமீபத்தில் அனிகா, முதன் முறையாக கிளாமரான உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகினார்கள்.

Advertisement
Advertisement