தன்னுடைய மகளுக்காக ஹீரோவை தேடும் பணியில் 90ஸ் நடிகை சிவரஞ்சனி – இவருக்கு இவ்ளோ பெரிய மகளா ?

0
1911
sivaranjini
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் 90 கால கட்டங்களில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிவரஞ்சனி. இவருடைய பூர்வீகம் சென்னை மயிலாப்பூர். மேலும்,நடிகை சிவரஞ்சனி மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் அதிக ஆர்வமும், திறமையும் கொண்டவர். மேலும், தனது கல்லூரி படிப்பு படிக்கும் காலத்திலே பல நாடகங்களில் நடித்தும், பல மேடைகளில் நடந்த நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல பாராட்டுகளை வாங்கிக் குவித்தவர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-5.jpg

மேலும், இவர் 1991 ஆம் ஆண்டு “மிஸ்டர் கார்த்திக்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும்,90 கால கட்டங்களில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். அதுமட்டும் இல்லாமல் இவருடைய வசீகரமான கண்ணுக்கு பல பேர் அடிமை என்று சொல்லலாம்.இவர் தமிழ் சினிமாவில் சத்யராஜ், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து உள்ளார்.

- Advertisement -

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களிலும் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து 1999 ஆம் ஆண்டுக்கு பிறகு தெலுங்கில் பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நடிகை சிவரஞ்சனி ஆந்திராவிலேயே செட்டில் ஆகி விட்டார். இவர்களுக்கு தற்போது மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். மேலும், இவர்களின் மூத்த மகன் ரோஷன் “நிர்மலா கான்வெண்ட்” என்ற தெலுங்கு படத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய மகள் மேகா டீன்ஏஜ் பருவத்தை எட்டியுள்ளதால், அவரை நாயகியாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம் இவர். ரஞ்சினியும், அவரது கணவரும் இணைந்து மகளுக்காக நல்ல கதையம்சம் கொண்ட இயக்குனர் மற்றும் ஹீரோவை தேடி வருகிறார்கள். ருத்ரமாதேவி என்ற திரைப்படத்தில் மேகா குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement