பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் பல பிரபலங்கள் தங்களுடைய சொந்த குரலில் டயலாக்குகளை பேசுவதில்லை. பல பிரபலங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் தான் குரல் கொடுக்கிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அந்த வகையில் பிரபல டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெயகீதா அவர்கள் சின்னத்திரை முதல் வெள்ளி திரை வரை என பல பிரபலங்களுக்கு குரல் கொடுத்து இருக்கிறார். இவர் வெள்ளித்திரையில் ரம்பா, மீனா, தேவயானி, ஜோதிகா போன்ற பல பிரபலங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறாராம்.

இந்நிலையில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெயகீதா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்றான காக்க காக்க படத்தில் ஜோதிகாவிற்கு குரல் கொடுத்து இருந்தார். அதில் அவருடைய குரல் மென்மையாகவும், ரொமான்டிக்காகவும் இருக்கும். அப்படியே அவர் திமிரு படத்தில் வில்லி கதாபாத்திரம் செம கெத்தாக பேசி இருப்பார். அவர் நேர்காணலில் குரல் கொடுத்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் பாருங்க : ஆனந்தி இல்ல, என் உண்மையான பெயர் இதான் – அந்த இயக்குனர் என் பெயரை மாற்றியது எனக்கே தெரியாது.

Advertisement

இதை பார்த்து பலரும் வியந்து போய் உள்ளார்கள். இவர்களா இப்படி ஒரு குரல் கொடுத்தது நம்பமுடியவில்லை என்று பலரும் கமெண்ட் செய்துள்ளார்கள். திமிரு படத்தில் வில்லி கதாபாத்திரம் அவருடைய குரல் மூலம் தான் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டப்பிங் ஆர்டிஸ்ட் ஜெயகீதா அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றான பாரதிகண்ணம்மா சீரியலிலும் டப்பிங் கொடுத்து வருகிறார். .

பாரதி கண்ணம்மா சீரியலில் இவர் மாமியார் சௌந்தர்யா கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்திருக்கிறார். இதற்கு முன்பாக இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் செம்பருத்தி தொடரில் அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement