தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஆனந்தி. நடிகை ஆனந்தி அவர்கள் ஆந்திர மாநிலம் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் தெலுங்கில் 2012 ஆம் ஆண்டு வெளியான “ஈ ராஜூலு” என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் 2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது.
இந்த கயல் படத்திற்கு பிறகு தான் இவருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். இறுதியாக கமலி from நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து இருந்தார்.
இதையும் பாருங்க : என்னது ரோஜா சீரியல் அணுவாக நடித்து வரும் சன் மியூசிக் அக்ஷ்யாவிற்கு திருமணம் ஆகிடுச்சாம்
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனந்தி, தன்னுடைய பெயர் ஆனந்தி இல்லை என்றும் தன்னுடைய உண்மையான பெயர் ரக்ஷிதா என்றும், பிரபு சாலமன் தான் தன்னுடைய பெயரை ஆனந்தி என்று மாற்றி விட்டதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் ஆனந்தி என்ற பெயர் தனக்கு பிடித்து இருந்தது என்றும் கூறியுள்ளார். இருப்பினும் ஆனந்தி முதல் 4 படங்களில் ரக்ஷிதா என்ற பெயரில் தான் நடித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இணை இயக்குநரான சாக்ரடீஸ் என்பவருடன் ஆனந்திக்கு திருமணம் நடைபெற்றது. சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மைத்துனர் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆனந்தி கற்பமாக இருக்கிறார்.