மெட்ராஸ் பட நடிகருடன் காதலில் விழுந்துவிட்டாரா சார்பட்டா பரம்பரை நாயகி ? இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் கேள்வி

0
707
dushara
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகையாக துஷாரா விஜயன் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த ‘சர்பட்டா பரம்பரை’ படத்தில் ‘மாரியம்மா’வாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார். இந்த படத்தில் பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

சார்பட்ட பரம்பரை :

வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இந்த படத்தின் மூலம் ஆர்யாவின் திரைப்பயணம் மாறியது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தில் ஆர்யாவின் மனைவியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை துஷாரா விஜயன் தமிழ் ரசிகர்களுக்கு கொஞ்சம் பரிச்சமில்லாத முகம் தான். ஆனால், இந்த படத்தில் இவரது நடிப்பு பாரட்டப்பட்டுகளை பெற்றது.

- Advertisement -

நடிகை துஷாரா பற்றிய தகவல் :

பலரும் சார்பட்டா பரம்பரை படம் தான் துஷாரா விஜயன் முதல் படம் என்று நினைத்து இருக்கிறார்கள். ஆனால், இவர் ஆரம்பத்தில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். அதற்கு பிறகு 2019 ஆம் ஆண்டு வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் அவருக்கு பெரிதாக பேசவில்லை. அதனை தொடர்ந்து இவர் பல குறும்படங்களில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்து இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

நட்சத்திரம் நகர்கிறது :

மேலும், இவர் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஆவார். பின் சர்பட்டா பரம்பரை கலைஞரும் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன், அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

துஷாரா பதிவு :

மேலும் இவர் தற்போது இயக்குனர் பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக அநீதி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது, மெட்றாஸ் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த ஹரி கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை துஷாரா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

காதலிக்கின்றனரா :

இதில் பிரச்னை என்னவென்றால் இந்த பதிவால் ஹரி கிருஷ்ணனைத் தான் நடிகை துஷாரா விஜயன் காதலிக்கிறாரா? என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏனெற்றால் அந்த பதிவில் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்னுடைய ஹரி” என்று குறிப்பிட்டிருந்தார். அதனால் தான் ரசிகர்கள் பலரும் நடிகை துஷாரா விஜயன் நடிகர் ஹரி கிருஷ்ணனை காதலிப்பதாக பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement