பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலை விமர்சித்த எடப்பாடிக்கு கமல் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று (டிசம்பர் 17) அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அரசு எப்படியோ அந்த வழியாகத்தான் அதிகாரிகளும் என கமல் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியால் கொஞ்சம் எடப்பாடியும் கடுப்பானார்.

பின்னர் இதற்கு பதில் அளித்த அவர், அவர் புதிதாக கட்சியைத் தொடங்கியுள்ளார். ரிடையர்டு ஆகி வந்துள்ளார். அவருக்கு என்ன தெரியும்? 70 வயதாகிறது. 70 வயதில் பிக் பாஸ் நடத்திக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நடத்துபவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? இதைப் பார்த்தால் ஊரிலுள்ள ஒரு குடும்பம்கூட நன்றாக இருக்காது.அவரெல்லாம் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவருடைய வேலை. அந்த டிவி தொடரைப் பார்த்தால் குழந்தைகளும் கெட்டுவிடும், நன்றாக உள்ள குடும்பமும் கெட்டுவிடும்.

இதையும் பாருங்க : அவெஞ்சர்ஸ் பட இயக்குனர் படத்தில் ஒரு தமிழன் – அடுத்த லெவலுக்கு சென்ற தனுஷ். அதிகாரபூர்வ அறிவிப்பு.

Advertisement

ஆக்கபூர்வமான திட்டங்கள் எத்தனையோ உள்ளன. நதிகள் இணைப்பைக் காட்டலாம். விவசாயிகள் மேற்கொள்ளும் பண்ணைத் திட்டம், புதிதாக என்னென்ன நடவு செய்கிறார்கள், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளவை எவை என மாணவர்களுக்கு நல்ல அறிவுரையைக் கொடுங்கள்.எம்ஜிஆர் சினிமா மூலம் நல்ல செய்திகளைச் சொல்லி, நல்ல பாடல்களைப் பாடியுள்ளார். இவர் ஒரு படத்திலாவது நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய பாடல்களைப் பாடியுள்ளாரா? அந்தப் படத்தைப் பார்த்தால் அத்துடன் அந்தக் குடும்பம் காலியாகிவிடும், அதுபோன்ற படங்களில்தான் நடிக்கின்றனர்.

எனவே, அவர் சொல்லும் கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதற்கு தன்னுடைய ஸ்டைலில் ட்விட்டரில் பதில் அளித்த கமல் ‘முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று பதிவிட்டு இருந்தார். அதே போல ‘சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். `எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்ற எம் ஜி ஆர் பாடலையும் பதிவிட்டுள்ளார் கமல்.

Advertisement
Advertisement