ஈரமான ரோஜாவே 2 சீரியல் புகழ் சித்தார்த் திருமணத்தில் கலந்துகொண்ட கேப்ரியல்லா – எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
2483
- Advertisement -

ஈரமான ரோஜாவே 2 சீரியல் நடிகர் பார்த்திபனின் திருமணத்தில் காவியா கலந்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் தொடர் தான் ஈரமான ரோஜாவே 2. ஏற்கனவே, ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி என பல நடிகர்கள் நடிக்கிறர்கள். இந்த தொடரும் ஆரம்பித்த நாளில் இருந்து தற்போது வரை பல திருப்பங்களுடன்,விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி. அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை. இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலித்து இருந்தார்கள். ஆனால், விதி செய்த வலியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

- Advertisement -

ஈரமான ரோஜாவே 2 சீரியல்:

சீரியலில் ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருக்கின்றது. தற்போது சீரியலில் ஜீவா- காவ்யா காதலித்த உண்மை வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதனால் நான்கு பேரும் நிம்மதி இல்லாமல் இருக்கிறார்கள். பின் காவியா கர்ப்பமாக இருப்பதை அறிந்து வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால், ஐஏஎஸ் தேர்வு எழுத வேண்டும் என்று அடம் பிடித்து காவியா சென்றதால் கர்ப்பம் கலைந்துவிடுகிறது.

சீரியலின் கதை:

இதனால் காவியா மனம் உடைந்து விடுகிறார். இந்த உண்மையை வீட்டில் சொல்லாமல் தவிக்கிறார். வீட்டில் எல்லோருமே காவியா கர்ப்பமாக இருப்பதை எண்ணி கொண்டாடுகிறார்கள். இன்னொரு பக்கம் வீட்டை விட்டு தனி குடுத்தனம் செல்ல ப்ரியா நினைக்கிறார். அதற்கு ஜீவா மறுக்கிறார். இறுதியில் பிரியா வீட்டை விட்டு வரவில்லை என்றால் எனக்கு விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்று கேட்கிறார். இனி ஜீவா பிரியாவுடன் தனிக்குடித்தனம் செல்வாரா? விவாகரத்து கொடுப்பாரா? காவியா கர்ப்பம் கலைந்த விஷயம் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிய வருமா? என்ற பல அதிரடி தெரிய சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

சித்தார்த் குறித்த தகவல்:

இப்படி கடந்த சில வாரங்களாகவே ஈரமான ரோஜாவே 2 சீரியல் சோகமாகவே சென்று கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியிலும் கடுப்பேற்றிருக்கிறது. இதனால் பலருமே தயவுசெய்து டிராக்கை மாற்றுங்கள் வேறு எதாவது பண்ணுங்கள் என்றெல்லாம் புலம்பி தள்ளி வருகிறார்கள். இந்த நிலையில் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சித்தார்த்தின் திருமண புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பார்த்திபன் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடித்து வருகிறார்.

காவியா புகைப்படம்:

இவர் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த டான்ஸரும் ஆவார். மேலும், இவருடைய திருமண வரவேற்பின் போது நடன இயக்குனர் சாண்டி மற்றும் தற்போது காவியா இருக்கும் கேப்ரில்லா கலந்து இருக்கிறார். அதை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து அப்போது காவியா எப்படி இருக்கிறார் பாருங்கள்? என்றெல்லாம் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

Advertisement