சன் டிவி சீரியலில் 'ஈரமான ரோஜாவே 2' நடிகை சுவாதி கமிட் ஆகியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி இருந்த சீரியல் தான் ஈரமான ரோஜாவே 2. இதன் முதல் பாகம் சீரியல் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் முடிவுக்கு வந்த பிறகு வித்தியாசமான கதைக்களத்துடன் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பி இருந்தார்கள்.

இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி கொண்டே என பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. சீரியலில் பார்த்தி, ஜீவா இருவரும் அண்ணன், தம்பி. அதேபோல் பிரியா, காவ்யா இருவரும் அக்கா, தங்கை. இதில் காவ்யா-ஜீவா இருவரும் காதலித்து இருந்தார்கள். ஆனால், விதி செய்த சதியால் பார்த்தி- காவியாவையும், ஜீவா-ப்ரியாவையும் திருமணம் செய்து இருந்தார்கள்.
ஈரமான ரோஜாவே 2 சீரியல்:
சீரியலில் ஜோடி மாறி திருமணம் ஆன பிறகு நடந்ததை தான் பரபரப்பாக கொடுத்து இருந்தார்கள்.
மேலும், இந்த சீரியலில் பிரியா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழில் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சுவாதி. இவர் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர். கன்னட மொழி படத்தின் மூலம் தான் இவர் சினிமா துறைக்குள் நுழைந்திருந்தார். இதுவரை இவர் கிட்டத்தட்ட நான்கு கன்னட படத்தில் நடித்திருந்தார்.

சுவாதி குறித்த தகவல்:
அதுமட்டுமில்லாமல் இவர் கன்னட சீரியலிலும் நடித்து இருந்தார். பின் தமிழில் ஈரமான ரோஜாவே 2 என்ற தொடரில் ஜீவா- பிரியா உடைய காம்பினேஷன் வேற லெவலில் இருந்தது. அது மட்டுமில்லாமல் இவர் இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார். இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். மேலும், இவர் நடிப்பதை தாண்டி நடனத்தின் மீது அதிக ஆர்வம் உடையவர். இவர் பெயிண்டிங் மீது தீராத காதல் உடையவர்.

சுவாதி கமிட்டாகி இருக்கும் சீரியல்:
ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மனதிற்கு பிடித்தவற்றை பெயிண்டிங் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகை சுவாதி புது சீரியலில் கமிட் ஆகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் 'மூன்று முடிச்சு' என்ற புது தொடரில் தான் கமிட் ஆகியிருக்கிறார். சமீபத்தில் தான் இந்த தொடர் உடைய ப்ரோமோ வெளியாகியிருந்தது.
https://www.youtube.com/watch?v=jtjyPO-XtVA
சீரியல் குறித்த தகவல்:
இந்த தொடரில் தன்னுடைய குடும்பத்திற்காக உழைக்கும் பெண்ணாக சுவாதி இருக்கிறார். கூடிய விரைவில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியானது தொடர்ந்து ரசிகர்கள் பலர் சுவாதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடித்த சித்தார், திரவியம் இருவருமே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார்கள். கேப்ரில்லா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மருமகள்' என்ற புது தொடரில் நடித்து வருகிறார்.






