இப்படி செய்து என்னை மிகவும் புண்படுத்தி விட்டார்கள். புலம்பி தள்ளிய ஈரமானே ரோஜாவே நிவிஷா…

0
38663
nivisha
- Advertisement -

-விளம்பரம்-

ஈரமான ரோஜாவே, ஓவியா உள்ளிட்ட சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நிவிஷா. இவர் முதலில் வெள்ளித்திரையில் தான் அறிமுகமானார். அதற்கு பிறகு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்காது என்று தெரிந்த உடன் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். அது மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களில் இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இவர் தன்னுடைய குடும்பம், சீரியல் அனுபவங்களைப் பற்றி பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டு உள்ளார். அவர் கூறியது,

- Advertisement -

என்னுடைய சொந்த ஊர் அறந்தாங்கி. எங்களிடம் சொந்த தோப்பு உள்ளது. என்னுடைய அப்பா தோப்பையும் பார்த்துக்கிட்டு கட்டட தொழிலும் பண்ணுவார். எங்க வீட்டுக்கு நான் ஒரே ஒரு பொண்ணு. என்னுடைய குடும்பத்திற்கு மீடியா, சினிமா இதெல்லாம் பழக்கம் கிடையாது. அதோடு எங்க குடும்பத்தை கலாச்சார, பாரம்பரிய குடும்பம் என்று சொல்லலாம். ஆனால், எனக்கு சின்ன வயசுல இருந்தே மேக்கப் பண்ணுவது ரொம்ப புடிக்கும். காலேஜ் படிக்கும்போதும் நான் ஷார்ட் பிலிம் நிறைய பண்ணி இருக்கேன். மேலும், நான் ஆர்வமாக நடித்தேன். ஏற்கனவே எனக்கு மேக்கப் பண்றது ரொம்ப பிடிக்கும்.

அதனாலே நான் அப்படியே சினிமாவுக்கு போயிட்டேன். ஆனா, பட வாய்ப்புகளும் நான் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு தான் தெய்வமகள் சீரியல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுல தொடங்கி இப்ப வரை சீரியல்ல நடிச்சிட்டு வரேன். எங்க வீட்டுல இப்ப கூட நான் சினிமா துறையில் இருக்கிறது அவங்களுக்கு பிடிக்கல. குறிப்பாக என் பாட்டிக்கு சுத்தமாக புடிக்கல. ஆனா, எனக்கு நடிப்பு ரொம்ப பிடிக்கும். நான் சினிமா துறையில் சாதிக்க ஒரு வெறியோடு இருக்கிறேன். எனக்கு மேக்கப் பண்றது ரொம்ப பிடிக்கும். அதுல ரெண்டு பேர் மேக்கப் பண்றது ரொம்ப ரொம்ப பிடிக்கும். அது யாருன்னா, யாரடி நீ மோகினி சீரியல் பாத்திமா பாபு மேடம், மின்னல் தீபா அக்கா.

-விளம்பரம்-

சமீப காலமாக எனக்கு சீரியல்ல வில்லி கதாபாத்திரங்கள் வந்து இருக்கு. ஆனா, அதுக்கு முன்னாடி நான் பாசிட்டிவ் கதாபாத்திரங்கள் தான் நடிச்சிட்டு வந்தேன். நான் உடனே போய் இயக்குனர் கிட்டேயும் இது பத்தி கேட்டேன். அதுக்கு அவர் ‘உன்னுடைய உயரமான , கம்பீரமான’ தோற்றத்துக்கு வில்லி கதாபாத்திரம் தான் நல்ல இருக்கும்ன்னு சொன்னாரு. அதோடு மக்கள் மத்தியிலேயும் நீ சீக்கிரம் பிரபலம் ஆயிடுவேன்னும் சொன்னாரு. முதல்ல நான் ஈரமான ரோஜாவே, ஓவியா சீரியல்ல பாசிட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடிக்க போறீங்கன்னு சொன்னாங்க.

அப்புறம் போகப் போக தான் எனக்கு தெரிஞ்சது என் கேரக்டர நெகட்டிவாக மாத்திட்டாங்கன்னு. பிறகு நான் அவங்க கிட்ட இதை கேட்டதுக்கு பதிலே சொல்லல. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. என்ன ரொம்ப ஹாட் பண்ணிட்டாங்கன்னு சொல்லலாம். அதனால நான் ரெண்டு சீரியல் இருந்தும் விலகுவதாக சொல்லிட்டேன். இதனால் நான் ரொம்ப அப்செட் ஆயிட்டேன். இனி மேல நான் அடிச்சா பாசிட்டிவ் கதாபாத்திரங்களுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன் என்று கூறினார்.

Advertisement