என்னக்கு ஆர்யா வேண்டாம்.! சூர்யா மாதிரி மாப்பிள்ளை தான் வேண்டும்..! சொன்னது யார் தெரியுமா .?

0
1425
surya
- Advertisement -

பெண்களிடம் உங்களுக்கு யார் மாதிரி கணவர் வேண்டும் ன்று கேட்டால் எனக்கு அஜித் மாதிரி வேண்டும் சூர்யா மாதிரி வேண்டும் என்று தான் கூறுவார்கள். இப்போதும் நடிகர் சூர்யாவிற்கு அந்த அளவிற்கு பெண் ரசிகைகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “எங்க வீட்டு மாப்பிள்ளை” நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாகிவிட்டனர்.

-விளம்பரம்-

Sriya-Surendran

- Advertisement -

ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் பங்குபெற்றனர். இதில் அந்த பெண்களுக்கு பல போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியில் வெற்றி பெரும் 1 பெண்ணை ஆர்யா திருமணம் செய்து கொள்ள வேண்டும். ஆனால் இறுதியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை .

இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்தவர் ஷ்ரியா சுரேந்திரன்,எனக்கு ஆர்யா வேண்டாம் நடிகர் சூர்யா மாதிரி மாப்பிள்ளை தான் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஷ்ரியா சுரேந்திரனிடம் உங்களுக்கு யாரை போன்று மாப்பிள்ளை வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

அதற்கு பதில்கூறிய ஷ்ரியா சுரேந்திரன் ” எனக்கு ஆர்யா வேண்டாம், நடிகர் சூர்யாவை போல மாப்பிள்ளை தான் வேண்டும், ஏனென்றால் அவர் தன்னுடைய மனைவி ஜோதிகாவை பார்த்துக் கொள்ளும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் ” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement