எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாவுக்கு இத்தனை கோடி சம்பளமா..?

0
1398
Actor aarya
- Advertisement -

சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் ஆர்யா திருமணம் செய்ய பெண் வேண்டும் என்று ஒரு ஜிம்மில் இருந்துகொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.அது விளையாட்டாக ஆர்யா செய்தார் என்று எதிர்பார்த்த நிலையில்,தற்போது தான் திருமணம் செய்துகொள்ள போகும் பெண்ணை தேர்வு செய்வதற்காக எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியில் ஆர்யா பங்குபெற்று வருகிறார்.

-விளம்பரம்-

Arya

- Advertisement -

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் 16 பெண்களை ஆர்யா முதலில் தேர்வு செய்தார் இதில் திருமணமாகி குழந்தை உள்ள பெண் ஒருவரும் கலந்துக்கொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் சில போட்டிகள் நடந்தப்பட்டது அதிலிருந்து சிலர் வெளியேற்றப்பட்டு தற்போது 10 பெண்கள் மட்டும் உள்ளனர்.

பொதுவாக படங்களில் நடிக்கும் ஆர்யா 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குவாரம்.மேலும்,ஒரு படத்திற்கு 2 மாதங்கள் தான் கால் ஷீட் கொடுப்பாராம்.ஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகர் ஆர்யா 10 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல்கள் வந்துள்ளது.இது இவர் படத்தில் நடிப்பதற்காக வாங்கும் சம்பளத்தை விட 3,4 மடங்கு அதிகம்.

-விளம்பரம்-
Advertisement