என்னப்பா எங்க வீட்டு மாப்பிள்ளை 2 வா.! காமெடி நடிகரால் ஷாக்கான ஆர்யா.!

0
993
- Advertisement -

தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக(அட நம்புங்க அவருக்கு ரோமன்ஸ் வரும் ) இருந்து வருபவர் நடிகர் ஆர்யா. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனக்கு திருமண ஆசை வந்துவிட்டது அதனால் யாராவது லவ் பண்ண பொண்ணு இருந்தா சொல்லுங்க என்று வீடியோ ஒன்றை வெளிடியிட்டார். 

-விளம்பரம்-

அது வெறும் காமெடி என்று நினைத்து வந்த நிலையில் கலர்ஸ் தொலைக்காட்சில் பெண் ஆர்யாவிற்கு பெண் தேடும் நிகழ்ச்சி ஒன்று துவங்கியது இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவரை ஆர்யா திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று அறிவித்திருந்தனர். ஆனால், இறுதி போட்டியில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் டிமிக்கு கொடுத்தார் ஆர்யா. 

- Advertisement -

இந்த நிகழ்ச்சி முடிந்து பல மாதம் ஆன நிலையில் சமீபத்தில் நடிகர் ஆர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டார். இந்த விடியோவை கண்ட காமெடி நடிகர் சதீஷ், இந்த வீடியோவ பாத்தா எங்க வீட்டு மாப்பிள்ளை 2 க்கு ரெடி ஆகிறா மாதிரி இருக்கே என்று கமெண்ட் செய்துள்ளார். அதற்கு ஆர்யா , முழிக்கும் ஒரு சமைலையால் பதிலளித்துள்ளது.

Advertisement