பிக் பாஸ் இசைவாணியின் நெருங்கிய தோழியுடன் காதல் – தன் காதலியை அறிமுகம் செய்து வைத்த அறிவு. யார் தெரியுமா ?

0
720
Therukural
- Advertisement -

என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய கலைஞர் அறிவு தான் காதலிக்கும் நபர் குறித்து அறிவித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமான ராப் பாடகராக திகழ்ந்து வருபவர் அறிவு என்கிற அறிவரசு கலைநேசன். இவர் தாழ்த்தப்பட்ட மக்களின் வலிகளை ரேப் இசை பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர். இவர் அரக்கோணத்தை சேர்ந்தவர். இவருக்கு சிறு வயதில் இருந்து நாட்டுப்புற இசையின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

-விளம்பரம்-

பின் இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது பா ரஞ்சித் உடைய அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதற்குப்பின் பா ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் இவர் சந்தோஷ் நாராயண இசையமைப்பில் பாட ஒப்பந்தமாகி இருந்தார். உரிமை மீட்போம் என்ற பாடலின் மூலம் இவர் தமிழ் சினிமாவுலகில் அறிமுகமானார்.

- Advertisement -

அறிவு திரைப்பயணம்:

அதனை தொடர்ந்து இவர் வடசென்னை, வந்தா ராஜாவா தான் வருவேன், நட்பே துணை, பட்டாஸ், டகால்டி, நாடோடிகள் 2, ஜிப்சி, சூரறை போற்று போன்ற பல படங்களில் பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் பாடகர் மட்டும் இல்லாமல் பாடல் எழுத்தாளராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சுயாதீன இசையும் செய்து இருக்கிறார்.

சுயதீன இசை:

அதில் இவர் இசைத்த தெருக்குரல், மங்கிஸ் வித் 5 ஜி, எஞ்சாய் என்சாமி போன்ற ஆல்பம் பாடல்களையும் இசைத்து இருக்கிறார். அதிலும் இவர் பாடிய ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் இந்திய அளவில் பிரபலமடைந்தது. பல பிரபலங்கள் இந்தப் பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார்கள். அதே போல இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் இந்த பாடல் படு பிரபலமானது.

-விளம்பரம்-

என்ஜாய் எஞ்சாமி பாடல்:

அதிலும் குழந்தைகளை இந்த பாடல் மிகவும் கவர்ந்தது . நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த பாடல் இந்திய அளவில் எந்த அளவிற்கு ஹிட் அடைந்தது என்பது நாம் அனைவரும் அறிவோம். இந்த நிலையில் பாடலாசிரியர் அறிவு காதலிக்கும் நபர் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அறிவு காதலிக்கும் நபர்:

அதாவது, அறிவு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர், தனக்கும் மார்கழியில் மக்கள் இசை குழுவின் ஒருங்கிணைப்பாளர் கல்பனாவிற்கும் இடையான காதலை குறித்து அறிவித்து ‘என் திமிரான தமிழச்சி’. மேலும், இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. கல்பனா பெரியார் வாதி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிக் பாஸ் இவர் இசைவாணியின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்ககுது

Advertisement