6 ஆண்டு காதலியை கரம்பிடிக்கும் எரும சாணி விஜய் – கல்யாண பதிவிற்கு ஹரிஜா போட்ட கமன்ட்.

0
920
vijay
- Advertisement -

பிரபல யூடுயூபரும் இயக்குனருமான விஜய்க்கு திருமணம் முடிந்து இருக்கும் தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விட இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருந்தது டிக் டாக் செயலி தான்.

-விளம்பரம்-

பலரும் தங்களுடைய நடிப்பு, நடன திறமைகளை எல்லாம் டிக் டாக் செயலி தான் வெளிப்படுத்தி இருந்தனர். இந்த செயலியை சீனா தான் முதன் முதலாக ஆரம்பித்தது. டிக் டாக் மூலமாகவே பலர் பிரபலமாகி சினிமா மற்றும் சின்னத்திரைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். ஆனால், இந்த செயலி பாதுகாப்பு இல்லை என்று இந்திய அரசு தடை செய்தது. டிக் டாக் செயலியை தடை செய்த பிறகு பலரும் youtube சேனல்களை ஆரம்பித்து விட்டார்கள்.

- Advertisement -

youtube சேனல் மூலம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கங்கள் வரை என பலருமே வருமானம் பார்க்கிறார்கள்.நட்பு, காதல், பாசம், காமெடி, சமையல், உடற்பயிற்சி, ஆரோக்கியம் என பல கண்டன்ட்களை உருவாக்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் youtube மூலம் பல பேர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் யூடியூப் சேனலை சரியாக பயன்படுத்தி பிரபலம் அடைந்தவர் தான் எரும சாணி விஜய்.

இவர் ஹரிஜா என்பவருடன் சேர்ந்து தான் youtube சேனலை நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் செய்யும் காமெடி வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகியிருந்தது.மேலும், இவர்கள் வெளியிட்ட வீடியோக்களில் காதலன்- காதலிக்கிடையில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், கணவன்- மனைவிக்கிடையில் நடக்கும் காமெடிகள் போன்ற வீடியோக்கள் எல்லாம் படு வைரல் ஆகி இருந்தது.

-விளம்பரம்-

இதனாலே எரும சாணி விஜய் குறுகிய காலத்தில் சோசியல் மீடியாவில் பிரபலமானார். ஒரு கட்டத்தில் இவரும் ஹரிஜாவும் காதலிக்கின்றனர் என்று கூட வதந்திகள் பரவியது. பின்னர் ஹரிஜா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஹரிஜா மற்றும் விஜய் இருவரும் பிரிந்து தனித்தனியாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். தற்போது விஜய் அவர்கள் படங்களை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார்.

அந்த வகையில் நடிகர் அருள் நிதியை வைத்து d-block என்ற படத்தை விஜய் இயக்கியிருந்தார். விஜய், நக்ஷத்ரா என்பவரை 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய்க்கு நக்ஷத்ரா என்பவருடன் திருமண நிச்சதார்தம் முடிந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்ற இருக்கிறது. இதுகுறித்து விஜய் பதிவிட்ட பதிவில் எருமை சாணி ஹரிஜா ‘இருவருக்கும் வாழ்த்துக்கள் பார்க்கவே வித்யாசமா இருக்கடா விஜய். மாப்பிள்ளை கலையா என்று கமன்ட் செய்து உள்ளார்.’

Advertisement