வருங்கால மனைவி உடன் எரும சாணி விஜய் ஆடிய நடன வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருந்தது. சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை விட இளம் தலைமுறையினரை அதிகம் கவர்ந்திருந்தது டிக் டாக் செயலி தான்.

பலரும் தங்களுடைய நடிப்பு, நடன திறமைகளை எல்லாம் டிக் டாக் செயலி தான் வெளிப்படுத்தி இருந்தனர். இந்த செயலியை சீனா தான் முதன் முதலாக ஆரம்பித்தது. டிக் டாக் மூலமாகவே பலர் பிரபலமாகி சினிமா மற்றும் சின்னத்திரைக்குள் நுழைந்து இருக்கிறார்கள். ஆனால், இந்த செயலி பாதுகாப்பு இல்லை என்று இந்திய அரசு தடை செய்தது. டிக் டாக் செயலியை தடை செய்த பிறகு பலரும் youtube சேனல்களை ஆரம்பித்து விட்டார்கள். youtube சேனல் மூலம் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கங்கள் வரை என பலருமே வருமானம் பார்க்கிறார்கள்.
இதையும் பாருங்க : நீயா நான் ஷோல நான் பேசுனது பாத்து தான் தமிழா தமிழாக்கு என்ன கூப்பிட்டாங்க, இத்தனை எபிசோட் போனா போதும்னு நெனச்சேன் - கருபழனியப்பன்.
Youtube சேனல் குறித்த தகவல்:
நட்பு, காதல், பாசம், காமெடி, சமையல், உடற்பயிற்சி, ஆரோக்கியம் என பல கண்டன்ட்களை உருவாக்கி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் youtube மூலம் பல பேர் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் யூடியூப் சேனலை சரியாக பயன்படுத்தி பிரபலம் அடைந்தவர் தான் எரும சாணி விஜய். இவர் ஹரிஜா என்பவருடன் சேர்ந்து தான் youtube சேனலை நடத்தி வந்தார். இவர்கள் இருவரும் செய்யும் காமெடி வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகியிருந்தது.
View this post on Instagram
எரும சாணி விஜய் வீடியோக்கள்:
மேலும், இவர்கள் வெளியிட்ட வீடியோக்களில் காதலன்- காதலிக்கிடையில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், கணவன்- மனைவிக்கிடையில் நடக்கும் காமெடிகள் போன்ற வீடியோக்கள் எல்லாம் படு வைரல் ஆகி இருந்தது. இதனாலே எரும சாணி விஜய் குறுகிய காலத்தில் சோசியல் மீடியாவில் பிரபலமானார். பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையினால் ஹரிஜா மற்றும் விஜய் இருவரும் பிரிந்து தனித்தனியாக வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
எரும சாணி விஜய் இயக்கிய படம்:
தற்போது விஜய் அவர்கள் படங்களை இயக்குவதில் பிஸியாக இருக்கிறார். அந்த வகையில் நடிகர் அருள் நிதியை வைத்து d-block என்ற படத்தை விஜய் இயக்கியிருந்தார். இந்த படம் சமீபத்தில் தான் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் எரும சாணி விஜய் வெளியிட்டு இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, தற்போது எரும சாணி விஜய்க்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது.

எரும சாணி விஜய் நிச்சயதார்த்தம்:
அந்த புகைப்படம், வீடியோக்களை தான் இவர் தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தன்னுடைய நீண்ட நாள் காதலி நட்சத்திராவை தான் திருமணம் செய்ய இருக்கிறார். மேலும், நிச்சயதார்த்தம் நடந்த இடத்தில் விஜய் செய்த லூட்டி, தன்னுடைய வருங்கால மனைவியுடன் ஆடிய நடனத்தையும் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து எப்போது திருமணம் என்று கேட்டு வருகிறார்கள்.





