சிவராத்திரியில் பிறந்த குழந்தை - ஆணா பெண்ணா என்பதை வித்யாசமான முறையில் அறிவித்த ஹரிஜா.

By Rajkumar · 11/3/2021

சிவராத்திரி அன்று தனக்கு பிறந்த குழந்தையை பற்றி வித்யாசமான முறையில் அறிவித்துள்ளார் நடிகை ஹரிஜா. யூடியூப் வலைதளத்தில் எருமை சாணி என்ற பக்கத்தில் விஜய் மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. எருமை சாணி’ சேனலில் இடம்பெற்ற விஜய், ஆர்ஜே விக்னேஷ்காந்த், மெட்ராஸ் சென்ட்ரல் கோபி, சுதாகர், ஷாரா, அகஸ்டின் என்று பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள்.இதில் ஒரு சிலர் தற்போது சினிமாவிலும் ஜொலித்து வருகின்றனர்.

மேலும், எருமை சாணி சேனலில் நடித்த விஜய் மற்றும் ராஜா இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால், தாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வந்தோம் என்று இருவருமே கூறினார்கள் மேலும், ஹரிஜா வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஹரிஜா, அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவருடன் ஷார்ட் பிலிம்களில் ஹரிஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர், நாயகியாக நடிக்க இருந்த சென்னை 28 பட நடிகை. 4 வருடத்தை கடந்த காதலும் கடந்துபோகும்.

மேலும் இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து ஷார்ட் பிலிம்ஸ்களில் நடித்து வருகிறார் ஹரிஜா. இப்படி ஒரு நிலையில் ஹரிஜா, கற்பமாக இருந்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் ஹரிஜாவிற்கு இன்று (மார்ச் 11) சிவராத்திரியில் குழந்தை பிறந்துள்ளது.

இதனை தனது சமூக வலைதளத்தில் வித்யாசமான முறையில் அறிவித்துள்ளார் ஹரிஜா. அதாவது ஹரிஜா மற்றும் அவரது கணவர் இருவரும் சிவன் மற்றும் பார்வதி ஆக இருப்பது போல புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்து இருக்கிறார். ஹரிஜாவிற்கு குழந்தை பிறந்துள்ளதையடுத்து பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full