படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர், நாயகியாக நடிக்க இருந்த சென்னை 28 பட நடிகை. 4 வருடத்தை கடந்த காதலும் கடந்துபோகும்.

0
1736
- Advertisement -

தன்னுடைய எதார்த்தமான நடிப்பும், பேச்சும் மூலம் தன்னுடைய சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர் நடிகர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த இவர் பின்னர் ஹீரோவாக களமிறங்கினார். விஜய் சேதுபதி பல்வேறு வித்தியாசமான கதைகளில் நடித்துள்ளார். அந்த வகையில் 2016ஆம் ஆண்டு நளன் குமாரசாமி எழுதி இயக்கிய காதலும் கடந்து போகும் திரைப்படமும் ஒரு அழகான, வித்யாசமான காதல் படமாக அமைந்து இருந்தது.

-விளம்பரம்-
காதலும் கடந்து போகும்

இப்படத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், சமுத்திரகனி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வெளியாகி இன்றோடு 4 ஆண்டுகள் ஆகியுள்ளது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை பற்றிய பல்வேறு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்  படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார்.

- Advertisement -

. கொரியன் படமான ‘My dear desperado’ பார்த்துட்டு இந்த படத்தை எடுக்கலாம் என்று நலன் குமாரசாமி இந்த படத்தை என்னை பார்க்க வைத்தார் பின்னர் இந்த படத்தின் காப்பி ரைட்டை வாங்கி படமாக்க முடிவு செய்தோம். படத்தின் ஹீரோ விஜய் சேதுபதிதான் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தோம் ஆனால் ஹீரோயினாக சென்னை-28 இரண்டாம் பாகத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்த சனா அல்தாஃப்பை தான் நடிக்க வைக்க எண்ணினோம்.

ஜெய் – சனா

ஆனால், அப்போது அவர் சின்னப் பெண் என்பதால் அவருக்கு பதில் படத்தில் மடோனாவை கமிட் செய்தோம். முதலில் இந்த படத்திற்கு மேயாதமான் என்றுதான் டைட்டில் வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம் ஆனால் நடந்தான் படத்திற்கு காதலும் கடந்து போகும் என்ற பகுதியில் சரியாக இருக்கும் என்று சொன்னதால் படத்திற்கு காதலும் கடந்து போகும் என்ற டைட்டிலை வைத்தோம். என்கிட்ட இருந்த ‘மேயாத மான்’ பெயரை கார்த்திக் சுப்புராஜ் படம் தயாரிக்குறப்போ பயன்படுத்துக்கிட்டார் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement