கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் வீடியோவை பகிர்ந்த ஹரிஜா.

By Rajkumar · 7/6/2021

சினிமா மற்றும் சின்னத்திரைக்கு இணையாக யூடுயூப் மூலம் பலர் பிரபலமாகி இருக்கிறார்கள், அந்த வகையில் எருமை சாணி ஹரிஜாவும் ஒருவர். யூடியூப் வலைதளத்தில் எருமை சாணி என்ற பக்கத்தில் விஜய் மற்றும் ராஜா இருவரும் சேர்ந்து வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. எருமை சாணி’ சேனலில் இடம்பெற்ற விஜய், ஆர்ஜே விக்னேஷ்காந்த், மெட்ராஸ் சென்ட்ரல் கோபி, சுதாகர், ஷாரா, அகஸ்டின் என்று பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள்.இதில் ஒரு சிலர் தற்போது சினிமாவிலும் ஜொலித்து வருகின்றனர்.

மேலும், எருமை சாணி சேனலில் நடித்த விஜய் மற்றும் ராஜா இருவரும் காதலித்து வருவதாகவும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் சில தகவல்கள் வெளியானது. ஆனால், தாங்கள் இருவரும் நண்பர்களாகத்தான் பழகி வந்தோம் என்று இருவருமே கூறினார்கள் மேலும், ஹரிஜா வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஹரிஜா, அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவருடன் ஷார்ட் பிலிம்களில் ஹரிஜா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : விஜய் டிவிய நம்பினால் வேலைக்கு ஆகாது, மீண்டும் பழைய டிவிக்கே திரும்பிய அசீம் - என்ன தொடர் தெரியுமா ?

மேலும் இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து ஷார்ட் பிலிம்ஸ்களில் நடித்து வருகிறார் ஹரிஜா. இப்படி ஒரு நிலையில் ஹரிஜா,கற்பமாக இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இப்படி ஒரு நிலையில் ஹரிஜாவிற்கு கடந்த மார்ச் 11 ஆம் தேதி சிவராத்திரியில் இவருக்கு குழந்தை பிறந்தது.

https://www.youtube.com/watch?v=H_-1-3xqqgI&t=84s

இதனை தனது சமூக வலைதளத்தில் வித்யாசமான முறையில் அறிவித்தார் ஹரிஜா. அதாவது ஹரிஜா மற்றும் அவரது கணவர் இருவரும் சிவன் மற்றும் பார்வதி ஆக இருப்பது போல புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துஇருந்தார். இப்படி ஒரு நிலையில் கர்ப்பமாக இருந்த போது நடத்திய போட்டோ ஷூட் வீடியோவை தனது யூடுயூபில் பகிர்ந்து உள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full