விஜய் டிவிய நம்பினால் வேலைக்கு ஆகாது, மீண்டும் பழைய டிவிக்கே திரும்பிய அசீம் – என்ன தொடர் தெரியுமா ?

0
1606
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சியில் ரோஜா, வானத்தை போல, ராஜா ராணி, ஈரமான ரோஜாவே ஆயுத எழுத்து, பாரதி கண்ணம்மா, நாம் ஒருவர் நமக்கு இருவர் என்று சென்டிமெண்டாக சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பான அணைத்து சீரியலும் ஹிட் தான். சினிமா டைட்டிலில் ஒளிபரப்பான ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய இரண்டு சீரியல்கலும் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த இரண்டு சீரியல்களிலும் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் அஸீம். ஆனால், விஜய் தொலைகாட்சிக்கு வருவதர்க்கு முன்பாகவே இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் vjவாக பணியாற்றினார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் சன் டிவியில் விகடன் தயாரித்த ஹிட் சீரியலான ‘பிரியமானவள்’ தொடரில் நடித்தார். அதன் பின்னர் தான் விஜய்டிவிக்கு வந்தார்.விஜய் டிவி சீரியலில் நடித்த போது இவருக்கும் ஷிவானிக்கும் காதல் மலர்ந்ததாக சர்ச்சை எழுந்தது. அதன் பின்னர் இவர் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்வதாக இருந்த நிலையில் இவர் உள்ளே சென்றால் ஷிவானி பிரச்சனை வரும் என்று அவரது அம்மா விஜய் டிவியை கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

பின்னர் இவர் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸும் தள்ளிப்போனதால் இனி விஜய் டிவியை நம்பினால் வேளைக்கு ஆகாது என்று மீண்டும் தனது தாய் வீடான சன் டிவிகே வந்துவிட்டார் அசீம். ஆம் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி வரும் பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க உள்ளார் அசீம்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலின் நாயகனாக நடித்த அருண் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.இந்த தொடரில் இன்று (7/6/21) முதல் ஹீரோவாக களம் இறங்குகிறார் அஸீம். அஸீம் எண்ட்ரியாகும் காட்சிகள் கடந்த இரு தினங்களாக ஷூட் செய்யப்பட்டிருக்கின்றன என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement