எதிர் நீச்சல் படத்தில் நடித்த நடிகை.! இப்போ எப்படி இருகாங்க பாருங்க.!

0
3071
Suza-Kumar
- Advertisement -

கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்து இருந்தார். அவரை தவிர இந்த படத்தில் அதிகம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சூசா குமார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் காதலியாக நடித்த இவர், ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் அனைத்து ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டார். அதிலும் இவருக்காகவே இ’ரவெல்லாம் செத்துப் போச்சு’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது.

- Advertisement -

சொல்லப்போனால் பிரியா ஆனந்திற்கு பதிலாக இவரையே சிவகார்த்திகேயனின் ஜோடியாக போட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறிவந்தனர். எதிர்நீச்சல் படத்தை தொடர்ந்து இவர், சிறுத்தை சிவா இயக்கி ‘வீரம்’ மற்றும் மாகாபா நடித்த ‘மாணிக்’ போன்ற படத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

26 வயதான இந்த இளம் நடிகை பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் சினிமா தொடர்புடைய படிப்புகளை படித்து முடித்த இவர், மாடலிங் துறையிடம் இருந்து வந்தார். அதன் பின்னரே இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது நீண்ட வருடங்களாக இவரைப் பற்றி செய்திகள் வராத நிலையில் சமீபத்தில் இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement