மாரிமுத்துவிற்கு அஜித் செய்த உதவி, ஆசை நிறைவேறாமல் காலமான சோகம். என்ன தெரியுமா ?

0
1517
- Advertisement -

மாரிமுத்துவின் கடைசி ஆசை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தவர் மாரிமுத்து. இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். தமிழில் இவர் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த ஜெயிலர் படத்தில் மாரிமுத்து நடித்திருந்தார்.

- Advertisement -

மாரிமுத்து திரைப்பயணம்:

ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து ரசிகர்கள் முதலில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை எடுத்து கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இந்த படத்தை சங்கர் இயக்கி வருகிறார். இப்படி தொடர்ந்து இவர் பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக மாரிமுத்து திடீர் மரணமடைந்தார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போது அவருக்கு நெஞ்சு வலி வந்து இருக்கிறது.

மாரிமுத்து திடீர் மரணம் :

உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்த செல்லப்பட்ட போது போகும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று மாலை அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவரின் இழப்பு பலருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், அவரது இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் மாரிமுத்துவின் நிறைவேறாத ஆசை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதாவது, மாரிமுத்து ஒரு பேட்டியில் அஜித் குறித்து கூறியிருந்தது, அஜித்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு பெரிய உதவியை செய்தார்.

-விளம்பரம்-

மாரிமுத்து நிறைவேறாத ஆசை:

அவர் எப்போதும் என் மீது ரொம்ப பிரியமாக இருப்பார். இப்பதான் தொடர்பில்லாமல் இருக்கிறது. அடுத்த படம் அவரோடு தான் நடிக்க போறேன். அப்போது எல்லாத்தையும் அவருடன் பகிர்ந்து கொள்ள போகிறேன். ஆசை, வாலி சமயத்தில் நான் அவருடன் பணியாற்றிய போது ரொம்ப பாசமாக இருப்பார். என் பைக்கில் அவரையம், அவரது பைக்கில் என்னையும் அழைத்துச் செல்வார். அந்த சமயத்தில் தான் என் மகன் பிறந்தநாள் வந்தது. அவன் வளரும்போது அஜித்தோடு படம் பண்ணிட்டு இருந்தோம். என் மகனை நல்ல பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதுமட்டுமில்லாமல் ஒரு பிரபலமான பள்ளி ஒன்றில் சேர்த்து நல்ல படிக்க வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த பள்ளியில் அனுமதி கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும் என்று கேட்டார்கள். அப்போது என்னிடம் பணம் இல்லை.

அஜித் குறித்து சொன்னது:

இதை நான் அஜித்திடம் சொன்னேன். உடனே அவர் மேலாளரை அனுப்பி பணத்தைக் கட்டி என் மகனை பள்ளியில் சேர்க்க சொன்னார். அதற்குப் பிறகு நான் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. இருந்தும் எட்டு வருடத்திற்கு அவர் தான் என் மகனின் கல்வி கட்டணத்தை செலுத்தினார். நான் பணம் கட்ட பள்ளிக்கு போவேன். அஜித் அலுவலகத்தில் இருந்து பணம் கட்டி விட்டார்கள் என்று சொல்வார்கள். எப்படி அவருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அவர் டிரஸ்ட் ஒன்றை ஆரம்பித்து பெரிய அளவில் செய்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால், அதை அவர் விளம்பரம் கூட செய்யவில்லை. அவரது வீட்டில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வீடு வாங்கி கொடுத்திருக்கிறார். எந்த ஒரு பெரிய முடிவுகளை யோசிக்காமல் செய்துவிடுவார். நாளை பார்க்கலாம், நாளை மறுநாள் பார்க்கலாம் என்று நினைக்கிற ஆளே கிடையாது என்று கூறியிருந்தார்.

Advertisement