யசோதா படத்தின் மீது ஹைதராபாத் மருத்துவமனை பதிவிட்டு இருக்கும் வழக்கு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது அதிலும் இவர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

சமீப காலமாக சமந்தா அவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சாகுந்தலம், திரில்லர் கதை அம்சம் கொண்ட படம், ஹாலிவுட் படம், குஷி போன்ற பல படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். தற்போது சமந்தாவின் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘யசோதா’. இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில் உருவாகி இந்த படம் உருவாகி இருக்கிறது.

Advertisement

இந்த படத்தில் சமந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமந்தாவுடன் இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், கல்பிகா கணேஷ், மாதுரிமா, திவ்யா ஸ்ரீபதா, ப்ரியங்கா ஷர்மா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

படத்தில் சமந்தா அவர்கள் பண தேவைக்காக வாடகை தாயாக மருத்துவமனைக்கு வருகிறார். அங்கு சமந்தாவைப் போல பல பெண்கள் இருக்கின்றனர். மருத்துவமனையில் வாடகை தாயாக வரும் பெண்களை வேறு ஏதோ தேவைக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த உண்மை சமந்தாவிற்கு தெரிய வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் சதி திட்டங்களை கண்டுபிடிக்க சமந்தா முயற்சிக்கிறார். இறுதியில் சதித்திட்டங்களை சமந்தா முறியடித்தாரா? சமந்தாவிற்கு என்ன ஆனது? என்பது தான் படத்தின் மீதி கதை.

Advertisement

முதல் பாதையில் அப்பாவி பெண்ணாக வரும் சமந்தா இரண்டாம் பாதியில் அதிரடி பெண்ணாக மாறி ஆக்ஷனில் இறங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் யசோதா படத்தின் மீது ஹைதராபாத் மருத்துவமனை பதிவிட்டு இருக்கும் வழக்கு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, யசோதா படத்தில் சமந்தா தங்கி இருக்கும் மருத்துவமனையின் பெயர் EVA என்று இருக்கும். ஆனால், உண்மையில் EVA IVF மருத்துவமனை ஹைதராபாத்தில் இருக்கிறது.

Advertisement

தற்போது இந்த மருத்துவமனை தான் சிவில் நீதிமன்றத்தில் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறது. அந்த வழக்கில் கூறியிருப்பது, எங்களுடைய மருத்துவமனையின் பெயரை வைத்து யசோதா படம் தவறான வகையில் சித்தரித்து இருக்கிறார்கள். இதனால் எங்களுடைய மருத்துவமனையின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். இதனால் யசோதா படத்தை டிசம்பர் 19ஆம் தேதி ஓடிடியில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement