ரத்னவேலுவை கொண்டாடும் கூட்டம் – முகநூலில் கவர் போட்டோவை மாற்றிய பஹத். அதுவும் எந்த போட்டோவை வச்சிருக்கார் பாருங்க.

0
2094
Fahad
- Advertisement -

மாமன்னன் படத்தில் தான் நடித்த ரத்னவேல் கதாபாத்திரம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் தனது முகநூல் பக்கத்தில் கவர் போட்டோவை மாற்றியுள்ளார் பஹத் பாஸில். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். இவர்களை தொடர்ந்து வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆ.ர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். மேலும், அனைவரும் எதிர்பார்த்த உதயநிதியின் மாமன்னன் படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

மாமன்னன் படம்:

படத்தில் எல்லோரும் தனக்கு கீழ் தான் அடங்கி நடக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதி வர்க்கத்தினருக்கும், சமுதாயத்தில் முன்னேறி வாழ வேண்டும் என்று அனைவரையும் சமமாக பார்க்கும் பட்டியலின மக்களுக்கும், இடையே நடக்கும் போராட்டம் தான் மாமன்னன் திரைப்படம். இதனைத்தொடர்ந்து இந்த படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை இயக்குனர் கூறி இருக்கிறார்.

மாமன்னன் படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தினை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்று இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த படம் Netflix தளத்தில் வெளியாகி இருந்தது. பொதுவாக ஒருபடம் திரையரங்கில் வெளியான போது வரும் விமர்சனங்களை விட அதே படம் Ottயில் வெளியாகும் போது தான் சமூக வலைதளத்தில் அதிகம் பேசப்படும்.

-விளம்பரம்-

வைரலாகும் பஹத் மீம்ஸ் :

அந்த வகையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியான போது சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டதை விட தற்போது தான் சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக நடித்த பகத் பாஸிலின் கதாபாத்திரத்தை ஹீரோ போல மாற்றி பல்வேறு நடிகர்களின் பாடல்களை எடிட் செய்து ஒரு சிலர் கொண்டாடி வருகின்றனர்.

கவர் போட்டோவை மாற்றிய பஹத் :

கடந்த இரண்டு தினங்களாக பஹத் பாஸில் தொடர்பான மீம்கள் தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு படத்தில் ஹீரோவை விட்டுவிட்டு வில்லனை கொண்டாடி வரும் நிலையில் தனது முகநூல் பக்கத்தில் மாமன்னன் படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்தின் புகைப்படங்களை கவர் போட்டோவாக வைத்துள்ளார் பஹத் பாஸில்.

Advertisement