பிரபல நடிகை பாபிலோனா சகோதரருக்கு அரிவாள் வெட்டு. வீட்டுக்குள் புகுந்து 8 பேர் வெறிச்செயல்.

0
1350
Babilona

தென்னிந்திய சினிமா உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாயா. இவர் அசத்தல், வட்டாரம், என் புருஷன் குழந்தை மாதிரி போன்ற படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்த பாபிலோனாவின் அம்மா ஆவார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் விக்கி என்ற விக்னேஷ்குமார் (39). இவர் சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தில் உள்ள அவரது பாட்டியின் வீட்டில் வசித்து வருகிறார். போதைக்கு அடிமையான இவர் இரண்டு ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் போதைக்காக காசு கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மாயா -பாபிலோனையின் தாயார்

இந்நிலையில் நேற்று இரவு இவருடைய மகன் விக்கியை வீட்டிற்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள் சராமாரியாக கத்தியால் தாக்கியதில் விக்கி பலத்த காயமடைந்தார். இந்த தாக்குதலில் விக்கி முதுகு, வயிறு, மார்பு பகுதிகளில் எல்லாம் பலத்த மற்றும் லேசான காயம் ஏற்பட்டது. பின் விக்கியை உடனடியாக அக்கம்பக்கத்தினர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

பின் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலிஸர் உடனடியாக விரைந்து வந்தனர். விக்கிக்கு போதை பழக்கம் இருந்தது. இதனால் இவர் போதையில் அடிக்கடி அந்த பகுதியில் உள்ளவர்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். பின் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கண்ணன், குட்டி, சதீஷ்குமார், பெருமாள் உட்பட 8 பேர் இவரை தாக்கியது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த வாரம் கஞ்சா மற்றும் மதுபோதையில் விக்னேஷ்குமார் கண்ணனை தாக்கியதாக கூறப்படுகிறது.

maya
தாக்கப்பட்ட விக்கி

இதற்கு பழிவாங்கவே கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இந்த விக்னேஷ்குமாரை தாக்கியதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் விக்கி போதையில் காவல்துறை அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இது குறித்து அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. தற்போது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து விக்னேஷ் இதுவரை யார் மீதும் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement