நடுரோட்டில் சரமாரி தாக்குதல், போலீஸ் வழக்கு பதிவு. சன் டிவி தொகுப்பாளர் Vj நிக்கி தலைமறைவு.

0
610
- Advertisement -

பிரபல யூடியூப் சேனலில் தொகுப்பாளராக இருந்து வருபவர் நிக்கிலேஷ் இவர் கோமாளித்தனமான பல மிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், பல நடிகைகளை பேட்டியும் எடுத்து பிரபலமானவர். இந்த நிலையில் இவர் சென்னையில் அடிதடியில் ஈடுபட்டு தலைமறைவாகி இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

தொகுப்பாளர் நிக்கிலேஷ் :

தனியார் சேனலில் சேர்ந்த தொகுப்பாளராக இருப்பவர் நிக்கிலேஷ். இவரை சுருக்கமாக நிக்கி என்று அழைப்பார்கள். இவர் பல சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றி இருக்கிறார். மேலும் தற்போது தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று 12 ஆம் தேதி சென்னையில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார்.

- Advertisement -

நிக்கிலேஷ் தலைமறைவு :

அப்போது எதிரில் காரில் வந்த ராஜேஷ் என்பவருக்கும் இவருக்கு சாலையில் வழிவிடுவதில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. விவாதத்தில் தொடங்கிய இது முற்றவே பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதனால் தொகுப்பாளர் நிக்கிலேஷ் முகத்தில் கண் மற்றும் புருவத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதே போல இவருடன் சண்டை போட்ட ராஜேஷ் என்பவருக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது.

கொலை மிரட்டல் :

இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். போலீசில் புகாரளித்த ராஜேஷ் மீது கொலை மிரட்டல் விட்டதாகவும், பிறரை தாக்குதல், காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் என பல பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்துள்ளார். இந்த நிலையில் தொகுப்பாளர் நிக்கிலேஷ் தலைமறைவாக இருப்பதாக காவல் துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

-விளம்பரம்-

பரபரப்பு :

மேலும் அக்கவுன்டென்ட் ராஜேஷ் மற்றும் தொகுப்பாளர் நிக்கிலேஷ் சண்டை போட்டுக் கொண்டதால் புரசை வாக்கம் பகுதியில் சாலை போக்குவரத்து செரிசல் ஏற்பட்டதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த சாட்சிகளில் அடிப்படையில் தலைமறைவான தொகுப்பாளர் நிக்கிலேஷ் மீதும் அக்கவுன்டென்ட் ராஜேஷ் மீதும் பொது வெளியில் ஆபாசமாக பேசுதல், சாலை விதிமுறைகளை மீறுதல், மற்றவர்களை தாக்குதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.

Advertisement