இந்தியன் 2 படத்தில் கமலுடன் முதல் முறையாக இணைந்த காமெடி நடிகர்.! வெளியான நம்பகர தகவல்.!

0
828
indian-2
- Advertisement -

உலக நாயகன் கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996-ஆம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது சங்கர் இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். முதல் பாகத்தில் வெளிநாட்டுக்கு சென்ற அவர் 22 ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியா லஞ்சம், ஊழலில் சிக்கி தவிப்பதால் மீண்டும் தாய்நாட்டிற்கே திரும்புகிறார். இதில் அவர் ‘ஒரு வேடமா 2 வேடங்களா என்று இப்போது கூற முடியாது.

- Advertisement -

ஆனால் தாய் நாடு திரும்பும் அவர் இளைஞர்களை திரட்டி ஊழல், லஞ்சத்துக்கு எதிராக போராடுவது போல் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் நெடுமுடி வேணுவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜியும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பராமான தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அவர் நெடு முடி வேணுவின் உதவியாளராக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement