‘தண்ணியடி, பெண்ணே தண்ணியடி’ டாஸ்மாக்கில் மது வாங்கிய பெண்களின் வீடியோவை பகிர்ந்து கஸ்தூரி போட்ட ட்வீட் – இயக்குனர் கொடுத்த பதிலடி.

0
3018
- Advertisement -

நடிகை கஸ்தூரியின் பதிவை பார்த்து கொந்தளித்து போய் இயக்குனரும், நடிகருமான நவீன் கொடுத்து இருக்கும் பதிலடி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் கஸ்தூரி. இவர் ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தின் மூலம் தான் கதாநாயகியாக சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதற்கு பிறகு சின்னவர், அமைதிப்படை, செந்தமிழ்பாட்டு, இந்தியன் என பல சூப்பர் ஹிட் படங்களில் கஸ்தூரி நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார். மேலும், தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த பிரபு, சத்யராஜ், கார்த்தி போன்ற பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். பின் இடைப்பட்ட காலத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போன நடிகை கஸ்தூரி அவர்கள் சிவா நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான ‘தமிழ் படம்’ என்ற படத்தில் குத்து விளக்கு என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

- Advertisement -

கஸ்தூரி திரைப்பயணம்:

அந்த பாடல் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து இருந்தார் கஸ்தூரி . அதன் பின்னர் பல்வேறு பட வாய்ப்புகள் கஸ்தூரிக்கு வந்த வண்ணம் இருந்தது. பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். ஆனால், இவரால் நிகழ்ச்சியில் நீண்ட நாட்கள் நீடித்து நிற்க முடியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

சோசியல் மீடியாவில் கஸ்தூரி:

அதுமட்டுமில்லாமல் சமூக பிரச்சினைகள் குறித்து எப்போதும் தைரியமாக பதிவிட்டு வருவார். இவர் எப்போதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று யாரையும் பார்க்காமல் ட்விட் போட்டு இருக்கிறார். இந்த நிலையைல் சமீபத்தில் இரண்டு பெண்கள் டாஸ்மாக்கில் நின்று மது வாங்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘’தண்ணியடி, பெண்ணே தண்ணியடி ! எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று தண்ணியடி.

-விளம்பரம்-

கஸ்தூரி டீவ்ட்:

அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாம திரும்பிடும். All dravidias கதறிங் on my timeline. உண்மையை சுட்டிக்காட்டிட்டா இந்த திரா-விடியா மூஞ்சிகளுக்கு ஒரே defence தான் – கேள்வி கேட்டவரை அசிங்கமா பேசுவது. இன்னும் தமிழ் நாட்டில் குடிக்காதவர்கள் உள்ளோம் என்பதை யோசிக்க கூட முடியாத, சுய ஒழுக்கமென்றால் என்னவென்றே அறியாத முழு நோயாளிகள்’’ என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து பலரும் கஸ்தூரியை வறுத்தெடுத்து எடுத்து வருகிறார்கள்.

நவீன் டீவ்ட்:

அந்த வகையில் தற்போது இயக்குநரும், நடிகருமான நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில், பணக்கார மேல்தட்டு பெண்கள் மது அருந்துவதை நீங்கள் பார்த்ததே இல்லையா? அப்போதெல்லாம் கெடாத சமூகம் சாமான்ய பெண்கள் சரக்கடிக்கும்போதுதான் கெடுமா? மது மனிதனின் உடல்நலத்திற்கு கேடு. ஆதிக்க உணர்வு சமூகத்திற்கே கேடு. பெண்னாக இருந்துகொண்டு திராவிடியா என்று சொல்வதை நிறுத்துங்கள் என்று கொந்தளித்து பதிலடி கொடுத்து இருக்கிறார்.

Advertisement