தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு மிகவும் சோகமான ஆண்டாக தான் அமைந்து உள்ளது. கொரோனா பிரச்சனை காரணமாக பல மாதங்களாக சினிமா படப்பிடிப்புகள் ஒருபுறம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் மற்றொரு புறம் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தொடர் மரணங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக காமெடி நடிகர்களான விவேக், பாண்டு, துளசி தாஸ், நெல்லை சிவா என்று எத்தனையோ பேர் இந்த ஆண்டு இருந்து போனார்கள்.

அந்த வகையில் தற்போது தமிழில் பல்வேறு வடிவேலு படங்களில் காமெடியான நடித்த நடிகர் காளிதாஸ் காலமாகி இருக்கும் சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் டப்பிங் கலைஞராக அறிமுகமானவர் நடிகர் காளிதாஸ். இவர் 3000 மேற்ப்பட்ட படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார்.

இதையும் பாருங்க : டேய், ஒரு போன் பண்ணி இருக்கலாம்ல – கோவித்து கொண்ட நண்பர். யார் பாருங்க

Advertisement

90ஸ் கிட்ஸ்களின் மிகவும் பிரபலமான தொடர்களின் ஒன்றான ‘மர்மதேசம்’ தொடரில் இவர் கொடுக்கும் டைட்டில் கார்டு குரலே 90ஸ் கிட்ஸ்களுக்கு பிரபலம் தான். மேலும், இவர் டப்பிங் கலைஞ்சராக மட்டும்மல்லாமல் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து ஒரு நடிகராகவும் திகழ்ந்தார். பின்னர் பல்வேறு வடிவேலுவின் காமெடியில் அசத்தி இருப்பார்.

கடந்த சில வருடங்களாக இவருக்கு ரத்தத்தில் பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக உடனடியாக அவருக்கு ரத்தத்தை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறவே, அதுவும் மாற்றப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி இன்று காலமாகி இருக்கிறார். இவரது திடீர் மரணத்தால் அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 

Advertisement
Advertisement