தமிழ் சினிமாவில் தளபதி என்று அழைக்கப்படும் விஜய்யை கிரிக்கெட்டில் தலை என்று அழைக்கப்படும் தோனி நேரில் சந்தித்து உரையாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறும் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி துபாயில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் போட்டியில் விளையாடும் என்று அறிவித்திருந்தது. இப்படி ஒரு நிலையில் Csk அணி வீரர்கள் பலரும் சென்னை வர துவங்கினர். அந்த வகையில் சென்னை அணியில் முதல் நபராக தோனி கடந்த சில நாட்களுக்கு முன் தனது குடும்பத்துடன் சென்னை வந்தடைந்தார்.
இப்படி ஒரு நிலையில் தோனி விஜய்யை பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்து அவருடன் கேரவனில் சிறிது நேரம் உரையாடி இருக்கிறார் அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இப்படி ஒரு நிலையில் விஜய் மற்றும் தோனியுடன் பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, நெல்சன் நண்பரும் பீஸ்ட் படத்தின் நடன இயக்குனருக்கான சதிஷ் ‘டேய், ரொம்ப டூ மச் டா, ஒரு போன் பண்ணி இருக்கலாமே நன்றி டா’ என்று செல்லமாக நெல்சனிடன் கோபித்து கொண்டுள்ளார். நடிகர் சதீஷ், விஜய்யின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.