தயவுசெஞ்சு குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க. கீர்த்தி சுரேஷுக்கு அட்வைஸ் செய்த ரசிகர்.

By Rajkumar · 17/2/2020

தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். 2000ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ் அவர்கள் ‘கீதாஞ்சலி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தனது அழகாலும், திறமையான நடிப்பாலும் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். இவர் ரஜினிமுருகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

https://www.instagram.com/p/B6dGympJ6GY/

தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “மகாநதி” என்று தெலுங்கில், “நடிகையர்-திலகம்” என்று தமிழில் படமாக எடுத்தார்கள். மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் மகாநதி (தமிழில் நடிகையர்-திலகம்) படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

இதையும் பாருங்க : ஒரு வழியாக உடலை குறைக்கும் விஜய் சேதுபதி. அதுவும் இந்த படத்திற்காக தான். இயக்குனரே சொல்லிட்டாரே

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று பல கருத்துக்கள் சமூக வலைகளில் பரவியது. பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்கும் மெய்டன் என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாக இருந்தது. ஆனால், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக நடிகை பிரியாமணியை ஒப்பந்தம் செய்து உள்ளார்கள் என்ற அதிகாரபூர்வ தகவல் கூட வெளியாகிஇருந்தது.

ஏனென்றால் கீர்த்தி சுரேஷ் அவர்கள் பார்ப்பதற்க்கு மிக இளமையாக தெரிவதாகவும், ஒப்பந்தத்தின் போது கீர்த்தி சுரேஷ் இருந்த உடல் எடையை விட தற்போது உடல் எடையை குறைத்து இருப்பதாகவும் தான் காரணம் என்று கூறப்பட்டது. சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் புடவையில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதில் ஒரு போஸில் முதுகை காண்பித்து போஸ் கொடுத்தவாறு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர், இத்தனைக்கும் புடவை தான் கட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், "தயவுசெஞ்சு குடும்ப பெண் மாதிரி போட்டோ போடுங்க" என்று கேட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full