ஒரு வழியாக உடலை குறைக்கும் விஜய் சேதுபதி. அதுவும் இந்த படத்திற்காக தான். இயக்குனரே சொல்லிட்டாரே

0
8681
Vijay-sethupathi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் சேதுபதி திகழ்ந்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே வேற லெவல் தெறிக்க விட்டது. சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே இவர் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். தற்போது இவர் கதாநாயகனாக மட்டுமில்லாமல் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த படம் நானும் ரவுடி தான். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை, அதிரடி, ஆக்ஷன், காதல் கலந்த படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, ராதா கிருஷ்ணன், பார்த்திபன், ராதிகா, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் மாற்றுத்திறனாளியாக, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இதனாலேயே இந்த படத்தில் நயன்தாராவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியும், விக்னேஷ் சிவனின் கூட்டணியில் புது படம் வெளிவர உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த புதிய படத்திற்காக விஜய் சேதுபதி உடல் எடையை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி–நயன் ஜோடி மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு “காத்துவாக்குல ரெண்டு காதல்” என்ற தலைப்பு வைத்து உள்ளார்கள்.

- Advertisement -

இதையும் பாருங்க : விஜய்யின் குட்டி கதையை கண்டு கொள்ளாத அட்லீ. ஆனால், இதற்கு மட்டும் ட்வீட். கேள்வி கேட்டு குடையும் ரசிகர்கள்.

மேலும், இந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. மீண்டும் இவர்கள் இருவரின் கூட்டணியும் வெற்றி அடையும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து பிரபல நாளிதழுக்கு விக்னேஷ் சிவன் அவர்கள் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியது, இந்த படத்தின் தலைப்பே எல்லாவற்றையும் விளக்கி விடும். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு வேடிக்கையான ரொமான்டிக் திரைப்படம். இந்த படத்தை நாங்கள் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுப்பதாக முடிவு செய்திருந்தோம். சில சூழ்நிலைகளால் தள்ளிப் போய்விட்டது. தற்போது இந்த படத்தை இயக்குவதற்கு முடிவு செய்துள்ளேன்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, நயன் மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் கதை இவர்கள் மூவருமே மிகவும் பிடித்திருக்கிறது. மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக எடையைக் குறைக்க உள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்னிந்தியாவிலும் அதை சுற்றி உள்ள இடத்திலும் நடத்த உள்ளோம். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அனிருத்துடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் அனிருத்தின் மிகப்பெரிய ரசிகன். இந்த படத்திற்காக பாடல்களை எழுத ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement