கிளாமரா நடிக்காதீங்க, உங்களுக்கு அது சுத்தமா செட் ஆகல, அட்வைஸ் செய்த ரசிகருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கொடுத்த பதில்.

0
606
aishwarya
- Advertisement -

கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்காதீர்கள் என்று ரசிகர் கேட்ட கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் நடன கலைஞர், தொகுப்பாளினி என பல துறைகளில் பங்காற்றி இருக்கிறார். இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரைப்படத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உட்பட பல படங்களில் நடித்து இருந்தார். இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது கனா,காக்கா முட்டை படம் தான். இந்த படங்களின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. மேலும், காக்க முட்டை படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை என்ற விருதையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார். அதோடு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : பீக் hourல இப்படி போட்டோ போடாதீங்க, ஜொல்லு விட்டு ரசிகர் போட்ட கமெண்டுக்கு பல்ப் கொடுத்த மாளவிகா.

ஐஸ்வர்யா ராஜேஷ் திரைப்பயணம்:

மேலும், இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிஸியான நடிகையாக திகழ்ந்து வருகிறார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் சுவர்ணா என்ற கேரக்டரில் நடித்திருந்தார் . இந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது தமிழில் போன்று தெலுங்கு சினிமாவிலும் பிரபலமாகி இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் இது வேதாளம் சொல்லும் கதை, இடம் பொருள் ஏவல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

சூழல்வெப் சீரிஸ் :

சமீபத்தில் இயக்குனர் பிரம்மா, அனுசரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் சுழல். இந்த படத்தை வால் வாட்ச்சர் பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பார்த்திபன், கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. மேலும், அமேசான் தளத்தில் முதன் முறையாக தமிழில் வெளிவந்த இணையத் தொடர் சூழல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாகி இருக்கிறது. இந்த தொடர் எட்டு அத்தியாயங்களாக வெளிவந்துள்ளது.

ரசிகர்கள் உடன் உரையாடல்:

இந்த தொடர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுடன் உரையாடியும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா தன் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து இருக்கிறார். அதில் ரசிகர்கள், உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்டதற்கு தெரியவில்லை என்பது போல பதிவிட்டிருந்தார்.

கிளாமர் ரோல் குறித்து ரசிகர் கேட்ட கேள்வி:

உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா ரொம்ப நாளாக சந்தேகமாக இருக்கிறது? என்று கேட்டதற்கு இல்லை சிங்கிள் தான் என்று சொல்லி இருக்கிறார். இதையடுத்து நீங்க ரொம்ப கிளாமர் ரோலில் நடிக்காதீர்கள் . அது உங்களுக்கு செட் ஆகல? தயவுசெய்து அதை அவாய்ட் பண்ணுங்கள் என்று கூறி இருக்கிறார். உடனே ஐஸ்வர்யா, ம்ம்ம்ம் சரி என்று சிரித்துக்கொண்டே பதிலளித்திருக்கிறார். இப்படியே தொடர்ந்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் பதிலை அளித்திருக்கிறார். தற்போது அந்த பதிவு சோஷியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement