நீங்கள் சிங்களா? கமிடடா? சிறுமி என்றும் பாராமல் பேபி சாராவை கேட்ட நபர். அவர் சொன்ன பதிலை பாருங்க.

By Rajkumar · 10/1/2020

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதை இடம் பிடித்து விடுகின்றனர். பேபி ஷாலினி துவங்கி பேபி அனிகா வரை தமிழ் சினிமா எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் தமிழில் விக்ரம் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “தெய்வத்திருமகள் ” படத்தில் விக்ரமின் மகளாக நடித்த குழந்தையை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பேபி சாரா தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

“தெய்வத்திருமகள் ” படத்திற்கு பிறகு தமிழில் “சித்திரையில் நிலாச்சோறு, சைவம்,விழித்திரு” போன்ற படங்களில் நடித்திருந்தார் பேபி சாரா. தற்போது ஹலிதா சமீம் என்ற பெண் இயக்குனர் இயக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பேபி சாரா. இயக்குனர் ஹலிதா சமீம் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த “பூவரசம் பீப்பி ” என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது இவர் இயக்கவுள்ள புதிய படத்தில் சமுத்திரக்கனி, நடிகை சுனைனா லீலா சாம்சன் போன்றவர்கள் நடிக்கவுள்ளனர்.

இதையும் பாருங்க : சிவாஜியுடன் இருக்கும் இந்த பிரபலம் யாருனு தெரியுதா ? நீங்களே பாருங்க .

இந்த படத்தில் 4 கதைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. பேபி சாராவை தமிழ் ரசிகர்கள் இறுதியாக 'சைவம்' படத்தில் பார்த்தனர். அதன் பின்னர் இவரை எந்த படத்திலும் பார்க்கமுடியவில்லை. சமீபத்தில் பேபி சாரா பொது நிகழ்ச்சிக்கு சென்ற புகைப்படம் வைரலானது. எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் பேபி சாரா சமீபத்தில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்களா ? இல்லை கமிடடா ? என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த பேபி சாரா மணலில் ஒற்றை கால்தடம் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, தான் சிங்கள் என்பதை வித்யாசமாக கூறியுள்ளார். மேலும், வேறொரு ரசிகர் நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டாதற்கு நான் இப்போது தான் 9 ஆம் வகுப்பு படிக்கிறேன் என்று கூறியுள்ளார் பேபி சாரா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full