சிவாஜியுடன் இருக்கும் இந்த பிரபலம் யாருனு தெரியுதா ? நீங்களே பாருங்க .

0
186835
sivaji
- Advertisement -

இந்திய சினிமாவில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஈடு இணை இன்று வரை கூட யாரும் கிடையாது. நடிப்பிற்கான இலக்கணத்தை வழிவகுத்தவரே நடிகர் சிவாஜி கணேசன் தான். தமிழ் சினிமாவில் உள்ள ஒவ்வொரு நடிகரும் தங்களுடைய வாழ்க்கையின் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்வது நடிகர் சிவாஜி கணேசனை தான். அந்த அளவிற்கு இவர் நடிப்பில் சாதனை படைத்தவர். இவருடன் இணைந்து நடிக்க கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டு வரை பல நடிகர்கள் போட்டி போட்டு கொண்டு நடிப்பார்கள். மேலும், இவர் முதன் முதலில் ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

-விளம்பரம்-
Image result for yuvan with sivaji

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இவர் பராசக்தியில் தொடங்கி படையப்பா படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை முடித்து கொண்டார். இதுவரை சினிமா துறையில் சிவாஜி கணேசன் அவர்கள் 300க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து உள்ளார். இவருடைய உண்மையான பெயர் கணேசன் தான். தந்தை பெரியார் தான் இவருக்கு சிவாஜி என்ற பெயரை வழங்கினார். அந்தளவிற்கு நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசனும், இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவும் ஒருவர். இவர் இசையமைப்பாளர், இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜாவின் இளைய மகன் ஆவார்.

யுவன் சங்கர் ராஜா 1997 ஆம் ஆண்டு ‘அரவிந்தன்’ என்ற படத்தின் மூலம் தான் தன்னுடைய இசைப் பயணத்தை தொடங்கினார். அதற்கு பிறகு பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து உள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் நடிகர் சிவாஜி கணேசன் அவர்களும் யுவன் சங்கர் ராஜா அவர்களும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அது மட்டும் இல்லாமல் ஆக்டிங் கிங், மியூசிக் கிங் இருவரும் இணைந்து உள்ள புகைப்படம் என்று பதிவிட்டு உள்ளார். மேலும், இவர்களுடைய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட்டிங் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

-விளம்பரம்-

அதோடு சினிமா உலகில் மிகப் பிரபலமானவர்கள் சேர்ந்து இருக்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வருவது அரிதான ஒன்று என்றும் கூறுகிறார்கள். இந்த புகைப்படத்தில் யுவன் சங்கர் அவர்கள் அவர்கள் மிகச் சிறு வயதில் உள்ள போது சிவாஜி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஆகும். தற்போது யுவன் சங்கர் அவர்கள் தல அஜித் நடிக்கும் வலிமை படத்திற்கு இசை அமைக்கப் போகிறார் என்ற தகவல் வந்து உள்ளது. ஆனால், இது இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

Advertisement