‘RRR படத்த குடும்பத்தோடு பார்த்தேன்’ – A சான்றிதழ் பெற்ற மன்மத லீலையுடன் ஒப்பிட்ட ரசிகருக்கு வெங்கட் பிரபு பதிலடி.

0
680
rrr
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் வெங்கட் பிரபு. இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மூத்த மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் வெங்கட் பிரபு அவர்கள் ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்தார். பின் இவர் “சென்னை 28” படம் மூலம் இயக்குனராக அவதாரமெடுத்தார். இவர் எடுத்த பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும் அஜித்தை வைத்து இவர் எடுத்த மங்காத்தா படம் மாபெரும் வெற்றி பெற்றது. பின் வெங்கட் அவர்கள் சிம்புவை வைத்து பல போராட்டங்களுக்கு பிறகு மாநாடு படத்தை இயக்கி இருந்தார். சமீபத்தில் தான் இந்த படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எப்போதும் போல் இல்லாமல் வெங்கட்பிரபு ஒரு வித்தியாசமான டைம் லூப் கான்செப்ட்டை கொண்டு படமாக்கியிருக்கிறார். மேலும், திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு கொண்ட படமாக மாநாடு படம் இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாநாடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், மாநாடு படத்தை தொடர்ந்து இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் தனது கிடைத்த இடைவெளியில் மன்மதலீலை என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

மன்மத லீலை படம் பற்றிய தகவல்:

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் சோசியல் மீடியாவில் வெளியாகியிருந்தது. டீசரில் அதிகம் முத்தம் கொடுக்கும் காட்சிகள் தான் இருந்தது. இதனால் சோஷியல் மீடியாவில் பலவிதமான கருத்துக்களை போட்டு இருந்தார்கள். மிகக் குறைந்த நாட்களே இந்த படத்தின் சூட்டிங் எடுத்து முடித்தது. மேலும், கடந்த வாரம் நடந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகன் அசோக் செல்வன் பேசி இருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு இயக்குனர் வெங்கட் பிரபுவும் விளக்கம் கொடுத்து இருந்தார்.

மன்மத லீலை படத்தை விமர்சித்து ரசிகர் பதிவிட்ட டீவ்ட்:

தற்போது மன்மதலீலை படத்தினை விளம்பர படுத்தும் பணியில் வெங்கட்பிரபு மும்முரமாக இறங்கியுள்ளார். இன்று இந்த படம் வெளியாகி உள்ளது. இந்தநிலையில் ரசிகர் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இப்பதான் RRR படத்தை குடும்பத்தோடு பார்த்து வந்தேன். சிறிது கூட கவர்ச்சி இல்லை. அதனால் தான் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்டதன் மூலம் வெங்கட் பிரபு படத்தை விமர்சித்து பேசி இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.

-விளம்பரம்-

வெங்கட் பிரபுவின் பதில் டீவ்ட்:

இந்நிலையில் இந்த பதிவை பார்த்த வெங்கட் பிரபு அவர்கள் கோபப்படாமல் பதில் டீவ்ட் போட்டு இருக்கிறார். அதில் அவர், இது உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாட வேண்டிய படம் என்று மன்மத லீலையின் ரிலீஸ் குறித்து பதிவிட்டிருக்கிறார். இப்படி வெங்கட்பிரபு பதிவிட்ட பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கான பிரமோஷன் விழாவில் வெங்கட் பிரபு அவர்கள்,

மன்மத லீலை படம் குறித்து வெங்கட் கூறியது:

இந்த படம் அனைத்து வயதினரும் பார்க்க வேண்டிய படம் தான். காதலன்-காதலி, கணவன்-மனைவி, நண்பர்கள் என எல்லோரும் பார்க்க வேண்டிய படம் தான். இந்த படத்தில் முகம் சுளிக்கும் வகையில் எந்த காட்சிகளும் இல்லை என்று கூறியிருந்தார். ஆனால், படத்தின் டிரைலர் வந்த போது பலரும் இதை விமர்சித்திருந்தார்கள். மேலும், இன்று வெளியாகியுள்ள மன்மத லீலை படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெறுமா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement