இரண்டாம் திருமணம் குறித்து கேட்ட நபர், கணவரிடம் கூறியுள்ள அஞ்சனா. அதுக்கு அவர் என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

By Rajkumar · 15/3/2021

பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர் வி ஜே அஞ்சனா, சன் ம்யூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான். இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர். இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ளவர் தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன். இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

மேலும், இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த கயல் படத்தில் நடித்த சந்திரனை கடந்த 2016 ஆம் ஆண்டு தொகுப்பாளினி அஞ்சனா திருமணம் செய்து கொண்டார். அதோடு இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் ஒரு அழகான ஆண் குழந்தை கூட பிறந்தது.

இதையும் பாருங்க : போய் அது உங்க அம்மா கிட்ட காட்டு - இளைஞ்சனின் புகைப்படத்தை பதிவிட்டு கடுப்பான அனிதா சம்பத்.

இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக ரி-என்ட்ரி கொடுத்து உள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வந்தார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்தார்.

https://twitter.com/Mysteri13472103/status/1371380435440128004

அப்போது ரசிகர் ஒருவர், ஐ லவ் யூ, என்ன இரண்டாம் திருமணம் பண்ணிக்கிறீங்களா என்று கேட்டதற்கு . நான் சொன்னேன் மௌலி கிட்ட, அதுக்கு அவர் சொன்னது அவர் அட்ரஸ் மட்டும் வாங்கு Danzo (கொரியர்) பண்ணி விட்டுடுறேனு சொன்னார். அப்பன்னா பாருங்க, எவ்ளோ கஷ்டப்பட்றானு. இதெல்லாம் தேவையா பாலாஜி என்று கூறியுள்ளார் அஞ்சனா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full