போய் அது உங்க அம்மா கிட்ட காட்டு – இளைஞ்சனின் புகைப்படத்தை பதிவிட்டு கடுப்பான அனிதா சம்பத்.

0
6644
anitha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் தனது சமூக வளைத்தளத்தில் நபர் ஒருவர் தனக்கு தொடர்ந்து அவதூறாக மெசேஜ் செய்து வருவதாக கூறி அந்த நபரின் புகைப்படத்தை பதிவிடுள்ளார். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.

- Advertisement -

அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார். மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

This image has an empty alt attribute; its file name is 1-172-579x1024.jpg

இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத்திற்கு தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் திட்டி தீர்த்து இளைஞர் ஒருவர் மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். அந்த இளைஞரின் புகைப்படத்தை பதிவிட்ட அனிதா சம்பத், பெண்களே இவனை சந்தித்தால் கவனமாக இருங்கள் வருங்கால rapist . நீ டைப் செய்ததை உன் அம்மாவிடம் காட்டு அவர் மிகவும் சந்தோசப்படுவார் என்று கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் இதே போல ஒருவரின் புகைப்படத்தை பதிவிட்டு வருங்கால rapist என்று பதிவிட்டு இருந்தார் அனிதா.

-விளம்பரம்-
Advertisement