தமிழ், தெலுங்கு,மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஸ்வாதி, தெலுங்கில் ஒரு சில படங்களில் பின்னணி பாடல்களையும் பாடியுள்ளார். தமிழில் இதுவரை பெரிய நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் ஜெய்,கிருஷ்ணா போன்ற 2 ஆம் நிலை ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
இதுவரை தமிழில் "இதற்கு தானே ஆசைபட்டாய் பாலா குமாரா, வடகறி, யட்சன் " போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது அழகே இவரது கொஞ்சம் எடுப்பான கோரை பற்களும், சற்று பூசலான உடல் அமைப்பும் தான். ஆனால் சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், கொஞ்சம் உடல் எடை கூடிவிட்டார் இந்த இளம் நடிகை.
தற்போது இந்தி படத்தில் நடித்து வரும் ஸ்வாதி, சமீபத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் உடலை குறைத்து அதன் பிறகு இந்த மாதிரி ஆடைகளை அணிந்து போஸ் கொடுங்கள் என்று கலாய்த்து வருகின்றன




