பிரபல காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம் அடைந்திருக்கும் சம்பவம் திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் வெறும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா கலைவாணர் முதல் தற்போது சந்தானம், சூரி வரை காமெடிக்கு பஞ்சம் இல்லாத படங்களை கொடுத்து வருகிறது. காலத்திற்கு பல காமெடி நடிகர்கள் வந்து முத்திரை பதித்து வருகின்றனர். காமெடி நடிகர்கள் என்றதும் நம் நினைவிற்கு வருவது கவுண்டமணி செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம் என்று இவர்கள் தான் நினைவிற்கு வரும்.

இதில் மயில்சாமிக்கு நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு. நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர். ரஜினிகாந்த் கமல் விஜயகாந்த் சத்யராஜ் என்று பல நடிகர்களை தொடர்ந்து இன்றைய தலைமுறை நடிகர்களான விஜய் அஜித் விக்ரம் சூர்யா விஷால் என்று பல நடிகர்களின் படத்திலும் நடித்திருக்கிறார். இதுவரை இவர் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி மற்றும் ஆரிய பாலாஜி நடித்த வீட்ல விசேஷங்க போன்ற படங்களில் நடித்திருந்தார்.

Advertisement

மயில்சாமி மறைவு :

நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சிவராத்திரி பூஜை நடைபெற்றது. அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய போது அவருக்கு திடீர் மரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருந்தது கடந்த டிசம்பர் மாதமே இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் அஞ்சலி :

இந்நிலையில் நடிகர் மயிலசாமியின் மறைவுக்கு ரஜினி, கார்த்தி, உதயநிதி ஸ்டாலின், நாசர், சூரி, மன்சூர் அலிகான், சதீஸ், விஜய் சேதுபதி போன்று பல நடிகர்கள் நேரில் வந்து நடிகர் மயில்சாமி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதற்கு பிறகு மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது. பின்னர் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மயானத்தில் பிரபல நகைச்சுவை நடிகரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertisement

கோவப்பட்ட சூரி :

இப்படி அஞ்சலி செலுத்தும் போதும் ஊர்லவதில் நடிகர் சூரி கலந்து கொண்டார். தொடக்கத்தில் இருந்தே ரசிகர்கள் இவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சி செய்தார். ஆனால் அவற்றை தவிர்த்து விட்டார் சூரி. ஆனால் செல்லும் வழியில் அவரது ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி புகைப்படத்தைக் எடுக்க கேட்டனர். இதனால் கலக்கமடைந்த சூரி “ புகைப்படம் கேட்க இது பொருத்தமான இடமா?” என்று கேட்டார்,ஆனாலும் தொடர்ந்து ரசிகர்கள் வற்புறுத்தியத்தினால் அவர் கூட்டத்தை விட்டு சென்று விட்டார்.

Advertisement

அஞ்சலி செலுத்திய கார்த்தி, நாசர் :

இதனை தொடர்ந்து நடிகர்கள் நாசர் மற்றும் கார்த்தியின் ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுக்கக் கோரிக்கை விடுத்தனர், ஆனால் அவர் தயவுசெய்து வேண்டாம் என்று கூறிவிட்டு சென்று விட்டனர். இந்த வீடியோ வைரலாக நிலையில் மறைந்தவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நேரத்தில் கூட செல்வி எடுக்க முயற்சித்த அந்த ரசிகர்களை சோசியல் மீடியாவில் கடுமையாக வசைபாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.

Advertisement