அஜித்தை வைத்து இந்த இந்தி படத்தின் தொடர்ச்சியை எடுங்க.! போனி கபூருக்கு வேண்டுகோள்.!

By Rajkumar · 11/4/2019

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் குமார் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யாபாலன் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் சிறப்பு காட்சியை இந்த படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் கண்டுள்ளார். இந்த படத்தை பார்த்துவிட்டு பின்னர் பேசிய போனி கபூர், இந்த படம் தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த படத்தில் அஜித்தின் நடிப்பு கண்டு தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : 50 வயது நடிகரை திருமணம் செய்த 27 மாணவி.! நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படம் .! 

மேலும்,அஜித்திற்காக மூன்று கதை தயாராக இருக்கிறது என்றும் ஒருவேளை அஜித் சம்மதித்தாள் கண்டிப்பாக அஜித்தை வைத்து இந்தியில் ஒரு படம் எடுப்பேன் என்றும் உறுதி கூறியுள்ளார்போனி கபூர். ஒரு வேலை அஜித் இந்தி படத்தில் நடித்தால் அது அஜித்தின் ரசிங்கர்களுக்கு மாபெரும் கொண்டாட்டமாக அமையும்.

https://twitter.com/BoneyKapoor/status/1115825925885779969

இந்த நிலையில் அவரின் பேட்டி கேட்டதில் இருந்து அஜித் ரசிகர்கள் போனி கபூருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதாவது அஜித்தை வைத்து தூம் 4 படம் எடுங்கள் என்கின்றனர். ஒரு வேலை அது நடந்தால் அது அஜித்திற்கு ஒரு பாலிவுட் மங்காத்தாவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full