பிரபல நடிகரின் முகத்தை முதுகில் டாட்டுவாக குத்திய தீவிர ரசிகை ! புகைப்படம் உள்ளே

0
6951
prabhas

அந்த காலம் முதல் தற்போது வரை நடிகர்களுக்கான பெண் ரகிகர்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். காதல் மன்னன் ஜெமினி கணேஷன், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் என இவர்களுக்கு எல்லாம் பெண் ரசிகைகள் அதிகம். தமிழகத்தின் பேராளுமை மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூட எம்.ஜி.ஆரின் ரசிகை தான்.
Baahubaliதற்போது வரை நடிகர்களுக்கும் பெண் ரசிகைகளுக்கும் உள்ள பந்தம் தொடரத்தான் செய்கிறது. தளபதி விஜயின் மனைவி சங்கீதா கூட அவரது ரசிகை தான், விஜயின் படத்தைப் பார்த்து பிடித்துப் போக ரசிகை ஆனார் .

பின்னர் விஜய்க்கும் பிடித்துப் போக இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.அதே போல், பாகுபலி பட நாயகன் பிரபாஸுக்கு படம் வெளியான பின்பு மட்டும் கிட்டத்தட்ட 6000 மேரேஜ் ப்ரொபோசல் வந்துள்ளது.
தற்போது அதனையும் தாண்டி பிரபாஸின் தீவிர ரசிகை ஒருவர் தனது முதுகில் பிரம்மாண்டமாக பிரபாஸின் முகத்தை டாட்டுவாக குத்தியுள்ளார். அந்த படம் தற்போது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. விட்டால் அந்த தீவிர ரசிகை பிரபாஸை திருமனம் செய்துகொள்வார் போலும் அந்த அளவிற்கு தீவிர ரசிகையாக உள்ளார்.

- Advertisement -
Advertisement