ஜெசி, ஜானு இரண்டு கதாபாத்திரத்திலும் திரிஷாவை சமந்தா மிஞ்ச முடியாது. ரசிகர்கள் கமன்ட்.

0
52339
jaanu
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை திரிஷா. கடந்த ஆண்டு நடிகை திரிஷா, விஜய் சேதுபதி அவர்களின் நடிப்பில் வெளிவந்த படம் “96”. இந்த படத்தை சி. பிரேம் குமார் அவர்கள் எழுதி, இயக்கியுள்ளார். நடிகை திரிஷா அவர்கள் இந்த படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார் என்று கூறலாம். மேலும், இந்த ’96’ படத்தின் மூலம் திரிஷா மீண்டும் ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்தார். அது மட்டும் இல்லாமல் 2018 ஆம் ஆண்டு வெளியான ஒரு காதல் காவியமாக இந்த படம் திகழ்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா இவர்களின் காதல் ரசிகர்களிடையே பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த படத்தில் தேவதர்ஷினி, ஆதித்யா பாஸ்கர், ஜனகராஜ், கௌரி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். நந்தகோபால் இந்த படத்தை தயாரித்து உள்ளார். அதோடு இந்த படத்திற்க்கு கோவிந்மேனன் இசை அமைத்து உள்ளார். அதோடு இவருடைய இசையில் ஒவ்வொரு பாடல்களும் சும்மா கிழி. இந்த படத்திற்கு சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்து உள்ளார்கள். இந்த படம் 1996 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பில் ஒன்றாக படித்த ராமச்சந்திரன், ஜானகி தேவி ஆகியோருக்கு இடையே காதல் ஏற்படுகிறது.

- Advertisement -

பின் குடும்ப பிரச்சனையால் இருவரும் பிரிந்தார்கள். பிரிந்தும் மறக்காமல் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தார்கள். பின்னர் பல வருடங்களுக்குப் பின் பழைய பள்ளி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து வைக்கும் பார்ட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து மனம் திறந்து பேசுகிறார். அவர்களுடைய பழைய நினைவுகளை அழகாக கூறியுள்ளார் இயக்குனர் பிரேம் குமார். மேலும், இந்த படம் வெளியானதை தொடர்ந்து மக்களிடையே நல்ல விமர்சனங்களையும், வசுலையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கில் “ஜானு” என்ற பெயரில் ரீமேக் செய்து உள்ளார்.

இயக்குனர் பிரேம் குமார். நடிகர் சர்வானந்த், சமந்தாவை வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார். இந்நிலையில் ஜானு படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதை பார்க்கும் போது 96 படத்தை அப்படியே ரீமேக் செய்திருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சர்வானந்த், சமந்தா ஆகியோரின் நடிப்பு இருந்தாலும் 96 படத்தில் விஜய் சேதுபதி, திரிஷாவை பார்க்கும் போது ஏற்பட்ட பிலிங் இந்த படத்தில் வரவில்லை என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும், சமந்தாவை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு பங்கமாக கலாய்த்து கழுவி ஊற்றி வருகின்றனர்.

-விளம்பரம்-

ஜானு டீசரை பார்த்து சமந்தாவை பலரும் கலைத்தாலும் ரசிகர் ஒருவர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், ஒரிஜினல் சாயம் இல்லாமல் சமந்தா தனது சிறப்பான முயற்சியை கொடுத்துள்ளார். அதுதான் ஒரு சிறந்த நடிகருக்கு அடையாளம். அவரது நடிப்பை காண நான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியிருந்தார். பல்வேறு கேலி கிண்டலுக்கு மத்தியில் ரசிகரின் இப்படி ஒரு கமென்ட் சமந்தாவை கொஞ்சம் நிம்மதி அடையச் செய்துள்ளது.

மேலும், தன்னை கலாய்ப்பவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் அந்த ரசிகருக்கு பதில் அளித்த சமந்தா, மிக்க நன்றி சிறப்பாக நடித்த திரிஷாவை போன்று நான் காப்பி அடிக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அது நடக்கவும் நடக்காது. ஜானு அதற்காக உருவாக்கப்பட்ட படம் கிடையாது மற்றவர்கள் இதனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது என்று கூறியுள்ளார் சமந்தா. இருப்பினும் ஜெஸ்ஸி, ஜானு என்ற இரண்டு கதாபாத்திரத்திலும் திரிஷாவை சமந்தா மிஞ்ச முடியாது என்று ரசிகர்கள் கமண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement