இவன் எல்லாம் ஒரு ஹீரோவா? தமிழகம் முழுவதும் போஸ்டர்கள்.! எதிராக திரும்பிய ரசிகர்கள்.!

By Rajkumar · 9/4/2019

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் ஒரு முக்கிய நடிகராக விளங்கி வருகிறார்.இவருக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆனால், சமீபத்தில் நடிகர் தனுஷ் எதிர்த்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://twitter.com/Deva_ICL/status/1115099705694773248

அந்த போஸ்டரில் 'இவன் எல்லாம் ஒரு ஹீரோவா? இவனுக்கெல்லாம் ஒரு ரசிகர் மன்றமா? ஆரம்பத்தில் வந்த பல அவமானங்களை தாண்டி நின்றவர்கள் நாங்கள்! ரசிகர்களை நீக்குவதற்கு சிவாவும், ராஜாவும் யார்!!

இதையும் படியுங்க : உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய வித்யூ ராமன்.! வியந்த ரசிகர்கள்.!

பல தோல்விகளிலும் என்னை தாங்கிப்பிடித்த தூண்கள்! என் ரசிகர்கள்!! என் ரசிகர்களை எக்காரணம் கொண்டும் நான் கைவிடமாட்டேன்! என்று சொன்னாயே தலைவா!! ஆனால், உங்களுக்காக உழைத்த ரசிகர்களை மறந்துவிட்டீர்களா?

நாங்களா? உங்களை தனுஷ்-காக கட் அவுட், பேனர், போஸ்டர் என செலவு செய்ய சொன்னோம் எனறு ஆணவத்தோடு பேசிய டச் அப்மேன் எச்ச ராஜா மீது நடவடிக்கை எடு!

தலைவன் தனுஷ்! நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்த தியேட்டரிலும் ரசிகர்கள் கொண்டாட்டம் இல்லாத படமா! என சொல்ல வைத்துவிடாதீர்கள்… நீங்கள் மறந்தால், போராட்டம் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் தனுஷ் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பாரா என கேள்வி எழுந்துள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full