OTT யில் 'நாரப்பா' பிளேடால் தனது கையை அறுத்துக்கொண்டு வீடியோ வெளியிட்ட பெண் ரசிகை.

By Rajkumar · 1/7/2021

கொரோனா பிரச்சனை காரணமாக திரைப்படங்கள் அனைத்தும் Ott தளத்தில் வெளியாகி வருகிறது. ஆனால், பெரிய நடிகர்களின் படங்கள் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொரோனா தாக்கம் குறைந்தாலும் திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ரிலீசுக்கு தயாராக இருந்த படங்கள் எல்லாம் நேரடியாக OTT யில் வெளியாகி வருகிறது. தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழி பாடங்களும் OTT யில் வெளியாகி வருகிறது.

இப்படி ஒரு நிலையில் தெலுங்கு ரசிகை வெங்கடேஷ் நடித்துள்ள 'நாரப்பா' திரைப்படம் OTT வெளியாவதை தாங்க முடியாமல் தனது கையை பிளேடால் நார் நாராக கிழித்து வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் “அசுரன்”. இந்த படம் “வெட்கை” என்ற நாவலின் அடிப்படையை வைத்து எடுக்கப்பட்ட படமாகும்.

இதையும் பாருங்க : ராஜா ராணி, பாரதி கண்ணம்மா இயக்குனரின் அடுத்த சீரியல் - இதோ புகைப்படம். (இவரே விட்டா விஜய் டிவிக்கு வழி இல்ல போல)

பிரகாஷ்ராஜ், பசுபதி,பாலாஜி, சக்திவேல், சுப்ரமணிய சிவா, யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரண்டு கெட்டப்பில் அசத்தி இருந்தார். இந்த படத்தில் தனுஷ் 40 வயதிற்கு மேற்பட்ட சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் தனுஷ். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தை தெலுங்கில் 'நாரப்பா' என்ற பெயரில் ரீ - மேக் செய்யப்பட்டது.

https://twitter.com/ganjerpalli/status/1410033017318305792

இதில் நாயகனாக பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடித்து இருந்தார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் [போஸ்டர் வெளியான போது இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் படு பங்கமாக கலாய்த்து இருந்தனர். இருப்பினும் தெலுங்கு ரசிகர்கள் இந்த படத்தை மிகுந்து ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் OTT யில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால், இந்த படத்தை நேரடியாக திரையரங்கில் வெளியிட வேண்டும் என்று வெங்கடேஷின் ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு எல்லாம் மேலாக சென்று இந்த படத்தை OTT யில் வெளியிட கூடாது என்று நடிகர் வெங்கடேஷின் தீவிர ரசிகையாக சுனிதா என்ற தனது கையை பிளேடால் அறுத்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full