ராஜா ராணி, பாரதி கண்ணம்மா இயக்குனரின் அடுத்த சீரியல் – இதோ புகைப்படம். (இவரே விட்டா விஜய் டிவிக்கு வழி இல்ல போல)

0
5441
raja
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்துள்ளது.சின்னத் தம்பி பெரியதம்பி, ராஜா ராணி, மௌன ராகம், கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டில்களை வைத்து ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் நல்ல வெற்றியை பெற்றது. அந்த வகையில் இதே பாணியில் சினிமா டைட்டிலை வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுவருகிறது.இந்த சீரியலில் பாரதியாக மேயாதமான் படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார்.

-விளம்பரம்-

இவருக்கு ஜோடியாக கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி நடிக்கிறார். இந்த சீரியல் இதுவரை 330 எபிசோடுக்கு மேல் கடந்துள்ளது. அதே போல இயக்குனர் பிரவீன் ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ச்சியை எடுத்து போல ராஜா ராணி சீரியலின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தையும் எடுத்து வருகிறார். இதில் ஹீரோவாக திருமணம் சீரியல் புகழ் சித்துவும் ஹீரோயினாக ஆல்யா மானசாவும் நடித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : 27 வாருடங்களுக்கு முன் அஜித்துடன் நடித்த போது எடுத்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் – மெட்டி ஒலி காயத்ரி ஷேரிங்.

- Advertisement -

இந்த சீரியலில் ஏற்கனவே இந்தியில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்ட ‘என் கணவன் என் தோழன்’ சீரியலின் ரீ-மேக் தான். இருப்பினும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மற்றொரு சீரியலான பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களின் பொறுமையை மிகவும் சோதித்து வருகிறது. பாரதிக்கு DNA டெஸ்ட் எடுங்கடா என்று ரசிகர்களே புலம்பி வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த இரண்டு சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் புதிய சீரியல் ஒன்றை இயக்க இருக்கிறார். மேலும், இந்த சீரியலுக்கு ‘நம்மவீட்டுபொண்ணு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் சம்மந்தப்பட்ட இந்த தொடரில் ஷப்னம் மற்றும் ஒரு சில நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். இந்த சீரியலை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement