பணத்திற்காக உறவுகளை தூக்கி எறியாதே, வைரலாகும் பிக் பாஸ் பூர்ணிமா ரவியின் அண்ணன் பதிவு
பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவியின் அண்ணன் போட்டிருக்கும் பதிவு தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 1995ஆம் ஆண்டு வேலூரில் பிறந்த பூர்ணிமா ரவி, அங்கேயே பள்ளி படிப்பை முடித்தார். விஐடியில் தனது பட்டப் படிப்பை முடித்த பூர்ணிமாவுக்கு ஐடி நிறுவனத்தில் வேலை கிடைத்தது. பின் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், அராத்தி என்ற youtube சேனலை தொடங்கினார். அதில் தனது நடன வீடியோக்கள், தனது புதிய யோசனைகளை பதிவு செய்து வந்தார்.
இவர் பதிவிடும் வீடியோக்கள் எதார்த்தமாக இருந்ததால் ரசிகர்கள் அதை விரும்பிப் பார்த்தனர். youtube மூலம் கிடைத்த ரெஸ்பான்ஸை வைத்து குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பப்பட்ட 'ஹே சண்டைக்காரி' என்கிற ஒரு சில வெப் சீரியஸ்களிலும் நடித்தார் இப்படி தொடர்ந்து பிஸியாக இருந்த பூர்ணிமா ரவிக்கு 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.
பூர்ணிமா ரவி குறித்து:
அந்தப் படத்தில் பாலா சரவணனுக்கு தங்கையாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் நயன்தாரா நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படத்தில் அவருக்கு தோழியாக நடித்திருந்தார். இதை எடுத்து, பூர்ணிமா ரவிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவியில் பிரம்மாண்டமாய் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் 'பிக் பாஸ்'. கடந்த ஆண்டு ஒளிபரப்பான 'பிக் பாஸ் 7' நிகழ்ச்சியில் தான் பூர்ணிமா போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் 7:
இந்த நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளரான மாயாவுடன் சேர்ந்து கொண்டு பிரதீப் ஆண்டனிக்கு எதிராக போர் கொடி தூக்கினார் பூர்ணிமா. இருந்தாலும், பிக் பாஸ் வீட்டில் 96 ஆவது நாள் வரை தாக்குப்பிடித்து, 16 லட்சம் ரூபாயுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதுமட்டுமில்லாமல், இவர் 96 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்ததற்காக 30 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு ஒரு சில படங்கள் மட்டுமே அமைந்தது.
பூர்ணிமா பிறந்தநாள்:
அந்த வகையில் இவர் 'செவப்பி' மற்றும் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' என்கிற படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது பெரிதாக எந்த பட வாய்ப்பு இல்லாததால் பூர்ணிமா போட்டோ ஷூட் களில் களம் இறங்கி இருக்கிறார். இதனிடையே நேற்று அக்டோபர் 5 தேதி, பூர்ணிமா தனது பிறந்த நாளை கொண்டாட பலர் அவரை வாழ்த்தியிருந்தார்கள். இந்நிலையில் பூர்ணிமாவின் அண்ணன் கிஷோர் ரவி, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டு இருக்கும் விஷயங்கள்தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
பூர்ணிமா அண்ணனின் பதிவு:
அதில், தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள். பணத்திற்காக ரத்த உறவுகளை இழக்காதே. தற்போது உன்னுடன் இருப்பவர்கள் எல்லாம் உன்னுடைய பணத்திற்காக தான் இருக்கிறார்கள். உன்னிடம் இருக்கும் பணம் தீர்ந்த உடனே, அவர்கள் உன்னை தூக்கி எறிந்து விடுவார்கள். அப்போது பணத்தைவிட ரத்த பந்தங்களை முக்கியம் என்று நீ உணர்வாய் என்று பதிவிட்டுள்ளார் மேலும், பிக் பாஸ் 7 முன்னாள் கண்டஸ்டண்ட் குறித்து என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். எனக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம், பணத்தால் பூர்ணிமா மற்றும் அவரின் அண்ணன் கிஷோருக்கும் ஏதோ பிரச்சனை என்று தெரிகிறது.